Chandramukhi 2: அடடே.. 'சந்திரமுகி 2' படத்துல இவுங்களும் இருக்காங்களா..?: எகிறும் எதிர்பார்ப்பு.!

ரஜினி நடிப்பில் வெளியான பிரம்மாண்ட வெற்றியை சுவைத்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி. வாசு இயக்கும் இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படம் குறித்து நடிகை மகிமா நம்பியார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் டான்சர், இயக்குனர், ஹீரோ என கலக்கி வரும் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா, … Read more

அல்லு அர்ஜுன் பதிலாக நானி

தெலுங்கு இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ஐகான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் ஹாட் டாபிக் இதுதான். அல்லு அர்ஜுன் இந்தப் படத்தைப் பெரிதும் விளம்பரப்படுத்தினார். அவர் தனக்கென 'ICON Star' என்ற பட்டத்தையும் ஏற்றுக் கொண்டார். அவர் பல சந்தர்ப்பங்களில் ஐகான் என எழுதப்பட்ட தொப்பியை அணிந்திருந்தார். ஆனால் 'புஷ்பா' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். தற்போது நடிகர் நானி இந்த படத்தில் … Read more

Mayilsamy: என்னால அப்படி இருக்கவே முடியாது..வெளிப்படையாக பேசிய மயில்சாமி..!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி கடந்த வாரம் மாரடைப்பால் காலமானார். 1988 ஆம் ஆண்டு வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் அறிமுகமான மயில்சாமி 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நகைச்சுவை திறனால் ரசிகர்களை ஈர்த்தார். படங்களை காட்டிலும் மயில்சாமியின் குணத்தாலே பல மக்களின் அன்பை சம்பாதித்தார் மயில்சாமி. உதவி என கேட்டு வருவோர்க்கு ஓடோடி உதவி செய்யும் மனப்பான்மையை உடைய மயில்சாமியின் மறைவு அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத … Read more

ராமராஜனின் ‘சாமானியன்’ படத்தை வெளியிட தடைக்கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாமானியன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், ‘சாமானியன்’ என்கிற பெயரில் படமெடுத்துள்ளனர். இந்தப் படத்தை ராஹேஷ் என்பவர் இயக்கி, இளையராஜா இசை அமைத்துள்ளார். 2022ஆம் ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கியிருந்தது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ஆர்ட் அடிக்ட் என்கிற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் எனவர் … Read more

கைதி ஹிந்தி ரீமேக்கில் ஐட்டம் பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி. பாடல்களே இல்லாத இந்த படம் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது கைதி படத்தை ஹிந்தியில் போலா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் அஜய் தேவ்கன். அவரே தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். வருகிற மார்ச் 30ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. அஜய் தேவகன் நாயகனான நடித்துள்ள இந்த படத்தில் தமிழில் நரேன் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் தபு நடித்திருக்கிறார். … Read more

Mirchi Shiva: 'ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ஆனா' – மிர்ச்சி சிவா அதிரடி..!

மிர்ச்சி சிவா நடிப்பில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ என்ற படம் உருவாகியுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகயிருக்கிறது. இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியுள்ளார். ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் … Read more

ஷாருக்கான் இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் 6 பிரபலங்கள் யார்?

ஷாரூக்கான் அண்மையில் பதான் திரைப்படம் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆயிரமாயிரம் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் வந்தபோதும், அவற்றையெல்லாம் முறியடித்து பதான் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை பல்வேறு இந்து அமைப்புகள் புறக்கணிக்குமாறு பிரச்சாரங்களை மேற்கொண்டன. ஆனால் அவையெல்லாம் எடுபடவில்லை. புறகணிப்பு பிரச்சாரம் பதான் படத்துக்கு மிகப்பெரிய புரோமோஷனாக அமைந்தது. அதுவே அந்த படம் இந்தியா முழுவதும் … Read more

பிரதீப் ரங்கநாதனை இயக்கும் விக்னேஷ் சிவன்? – வெளியான தகவல்!

தனது அடுத்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கோமாளி’ படத்தைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கி தயாரித்திருந்தப் படம் ‘லவ் டுடே’. இளைஞர்கள் மற்றும் 2K கிட்ஸ்களை கவரும் வகையில் உருவான இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் … Read more

'அயலி'யின் துன்பத்தை நானும் அனுபவித்தேன் : அனுமோள்

கண்ணுக்குள்ளே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனுமோள். அதன்பிறகு மலையாள படங்களில் நடித்தார். சத்யராஜ் நடித்த 'ஒருநாள் இரவில்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து மீண்டும் தமிழுக்கு வந்தார். தற்போது அவர் 'அயலி' வெப் தொடரில் அயலியின் அம்மாவாக நடித்துள்ளார். பரவலான பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அயலிக்கு இந்த அளவு வரவேற்பு இருக்குமென நினைக்கவில்லை. எல்லோரும் பாராட்டுகிறார்கள். நினைக்காத இடத்திலிருந்தெல்லாம் பாராட்டு குவிந்து வருகிறது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு நாள் … Read more

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் ‘வடக்கன்’ படப்பிடிப்பு துவக்கம்

பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்க, முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கன்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் மற்றும் பதிப்பாளர் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய … Read more