இந்தோனேசியா சிவன் கோயில் குளத்தில் புனித நீராடிய அமலாபால்

மலையாளம், தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வரும் அமலாபால், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வரும் அமலாபால், அடிக்கடி ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்த அமலா பால், மகா சிவராத்திரி அன்று இந்தோனேசியாவில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள குளத்தில் புனித நீராடி இருக்கிறார். … Read more

விஜய்யின் லியோ படத்தில் விஜய் சேதுபதியா?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் , சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படமும் லோகேஷ் கனகராஜின் எல்சியு படம் என்கிற தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதனால் இந்த படத்தில் கைதியில் டில்லி வேடத்தில் நடித்த கார்த்தி, விக்ரம் படத்தில் கமல் மற்றும் ரோலக்ஸாக நடித்த சூர்யா … Read more

பேண்டஸி படமாக உருவாகும் 'வீரன்'

ஹிப் ஆப் ஆதி நடித்த அன்பறிவு படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் ஆதியை வைத்து அடுத்து தயாரிக்கும் படம் 'வீரன்'. 'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்குகிறார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது. ஆதியுடன், அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஆதியே இசை அமைக்கிறார். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை … Read more

ரூ.1000 கோடி வசூலைக் கடந்த 'பதான்'

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'பதான்'. இப்படம் தற்போது 1000 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட வெளியீட்டிலேயே உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்தியாவில் மொத்த வசூலாக 623 கோடி, நிகர வசூலாக 516 கோடி, வெளிநாடுகளில் மொத்த வசூலாக 377 கோடியை … Read more

தமிழில் ஹீரோயின் ஆன மலையாள டிவி நடிகை

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதை நாயகியாகவும் நடித்தவர் தேவ் கிருஷ்ணன். தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் அங்கு புகழ் பெற்றவர். சுவாமி அய்யப்பன், மழையறியாதே தொடர்களில் நடித்தார். தற்போது தேவிகா கிருஷ்ணன் என்ற பெயரில் தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும் இந்த படத்தில் முரளி ராம் கதையின் நாயகனாகவும் தேவிகா கிருஷ்ணன் நாயகியாகவும் நடிக்கிறார்கள். டிரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார். ரொமாண்டிக் க்ரைம் … Read more

அண்ணனுக்காக படம் தயாரித்த தங்கை

தமிழ் படங்களின் கேரள விநியோகஸ்தராக இருந்தவர் சிபு தமீம்ஸ். குறிப்பாக விஜய் படங்களை கேரளாவில் பெரிய அளவில் விநியோகித்தவர். விஜய் நடித்த புலி, விக்ரம் நடித்த இருமுகன் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். இவரது மகன் ஹிருது ஹாருன், தக்ஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா … Read more

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கராத்தே வீராங்கனை

மலையாளத்தில் தற்போது பிரியதர்ஷன் இயக்கி வரும் படம் 'கொரோனா பேப்பர்ஸ்'. இதில் ஷேனு நிகாம் நாயகனாகவும், காயத்ரி சங்கர் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்திக், ஷைன் டாம் சாக்கோ, மணியன்பிள்ளை ராஜு, ஸ்ரீதன்யா, விஜிலேஷ், மேனகா சுரேஷ், பிஜு பாப்பன், ஸ்ரீகாந்த் முரளி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சந்தியா ஷெட்டி. மிஸ்.இந்தியா போட்டியில் சூப்பர் மாடலாக தேர்வு பெற்ற இவர் ஒரு கராத்தே சாம்பியன். தேசிய அளவிலான … Read more

மீண்டும் அஜித் படத்தில் வில்லனாகும் அருண் விஜய்?

அஜித், திரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லன் வேடத்தில் நடித்தவர் அருண் விஜய். அதற்கு முன்பு அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த நிலையில் வில்லனாக நடித்த இந்த படம் அருண் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு அவரது ஹீரோ மார்க்கெட் சூடு பிடித்தது. அதோடு, மகிழ்திருமேனி இயக்கிய தடம், தடையறத் தாக்க போன்ற படங்களிலும் … Read more

AK 62 Update: ஒரு வழியாக கன்பார்மான 'ஏகே 62' இயக்குனர்: சம்பவம் ஆரம்பம்.!

‘ஏகே 62’ படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதை தொடர்ந்து மகிழ் திருமேனி இந்தப்படத்தை இயக்கவுள்ளதாக உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளது. எச். வினோத்அஜித் நடிப்பில் கடந்த மாதம் ‘துணிவு’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் கடைசி மூன்று படங்களையும் எச். வினோத்தே இயக்கிய நிலையில் தற்போது புதிய இயக்குனருடன் அஜித் இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ‘ஏகே 62’ இயக்குனர் யார் என்ற குழப்பம் தற்போது நீங்கியுள்ளது. சொதப்பிய வலிமைஅஜித், … Read more

'ஜாக்சன் துரை' 2ம் பாகம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

2016ம் ஆண்டு வெளியான படம் 'ஜாக்சன் துரை'. இதில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். தரணிதரன் இயக்க, சித்தார்த் விபின் இசை அமைத்திருந்தார், யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். காமெடி பேய் படமாக இது தயாராகி இருந்தது. ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற படம். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தையும் தரணிதரனே இயக்குகிறார். சிபி, சத்யராஜ் இருவரும் நடிக்கிறார்கள். … Read more