Jailer: 'ஜெயிலர்' படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த பிரபலம்: தீயாய் பரவும் புகைப்படம்.!

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு படு தீவிரமாக நடந்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் இணைந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ள ரஜினியின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தில் தினமும் ஒரு பிரபலம் இணைந்து வருகின்றனர். பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் இணைந்து வருவதால் பான் இந்தியா படமாக ‘ஜெயிலர்’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது. … Read more

‘வடக்குப்பட்டி ராமசாமி’.. படத்தில் சந்தானம் ஜோடியான மேகா ஆகாஷ்!

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற நகைச்சுவை திரைப்படத்தில், கதாநாயகியாக இணைந்துள்ளார் நடிகை மேகா ஆகாஷ். தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கிய சந்தானம், கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘அறை எண் 305-ல் கடவுள்’ என்றப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சிலப் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தாலும், கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயதம்’ என்றப் படத்திற்குப் பிறகு கதாநாயகனாகவே நடித்து வருகிறார் சந்தானம். கடந்த … Read more

மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு

“நான் காமெடியன்தான். என் மூஞ்சி காமெடிக்குத்தான் லாயக்கு” என்று யோகி பாபு அடிக்கடி சொல்லி வந்தாலும், அவரும் அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் அவர் கதை நாயகனாக நடித்த பொம்மை நாயகி வெளியானது. இந்த நிலையில் அடுத்து லக்கி மேன் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ரேச்சல் ரெபேக்கா, அப்துல் … Read more

Leo, Trisha: மூன்றே நாளில் த்ரிஷா சென்னை திரும்பியதற்கான காரணம் இதுதான்.. படக்குழு தகவல்!

நடிகை த்ரிஷா மூன்றே நாளில் சென்னை திரும்பியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. லியோநடிகர் விஜய்யினன் 67 வது திரைப்படம் லியோ. இப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ளார். லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி … Read more

படிப்பை விற்காதீர்கள்: தனுஷ்

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள படம் வாத்தி. இதில் தனுசுடன் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, சசிகுமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன், இளவரசு, ஹரிஷ் பெரடி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். வருகிற 17ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோசன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த புரமோஷன் நிகழ்வில் தனுஷ் பேசியதாவது: … Read more

AK 62: AK62 படத்திலிருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் இதுவா ? தரமான சம்பவம் லோடிங்..!

சிம்பு நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விக்னேஷ் சிவன். அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அடுத்ததாக அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்தார் விக்னேஷ் சிவன். அதைத்தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கிய அவருக்கு … Read more

பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ்

நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோசன் நிகழ்ச்சியில்கூட பங்கேற்பதில்லை. விருது விழாக்கள், தான் தயாரிக்கும் படங்களின் தனி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பார். முதன் முறையாக சென்னை புறநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமானது, மகிழ்ச்சி நிறைந்தது. இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்துக்கானது. இந்த சமயத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பது முக்கியமானது. இந்த நேரத்தில், … Read more

Samantha: மீண்டும் சிக்கலில் சமந்தா: வருத்தத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அண்மையில் வெளியான ‘யசோதா’ படத்தினை தொடர்ந்து இந்தப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்திருந்த ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி போயுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த வருடம் மனம் ஒத்து பிரிவதாக … Read more

அமெரிக்க வசூல் – இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்'

இந்தியத் திரைப்படங்களுக்கு அமெரிக்காவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று செட்டிலான இந்தியர்கள், அங்கு வேலை பார்க்கச் சென்றுள்ளவர்களால் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அங்கும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இதுவரை வெளியான இந்தியப் படங்களில் தெலுங்குப் படமான 'பாகுபலி 2' படம் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பிடித்து முதலிடத்தில் இருக்கிறது. 14.3 மில்லியன் வசூலைப் பிடித்து இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தை தற்போது மூன்றாம் இடத்திற்குத் தள்ளியுள்ளது … Read more

Chiyaan Vikram: போடு வெடிய.. விரைவில் ரிலீசாகும் 'துருவ நட்சத்திரம்': தாறுமாறு அப்டேட்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மல்டி ஸ்டார் படமாக வெளியான இந்தப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார் விக்ரம். கடந்தாண்டு வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள 61-வது படத்தை பா.இரஞ்சித் இயக்குகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக … Read more