Lata Mangeshkar: இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு முதலாமாண்டு அஞ்சலி! ஆராரோ ஆரிரோ

Tribute To Melody Queen Lata Mangeskar: பாரத ரத்னா பத்ம பூஷன் பத்ம விபூஷன் என பல விருதுகளை அலங்கரித்து 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மஞ்கேஷ்கர் என்றென்றும் இசையிலகில் நீங்கா இடம் பிடித்த இசைக்குயில். இந்தியாவின் தலைசிறந்த பாடகி லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. குரலால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த கானக்குயிலின் கானம் நின்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தன் குரலால் அனைவரது மனதையும் வென்ற லதா மங்கேஷ்கரின் … Read more

பிரபல வில்லன் நடிகர் கைது!!

பண மோசடி வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பாபுராஜை காவல்துறையினர் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர். மலையாள திரையுலகில் 25 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் பாபுராஜ், தமிழில் ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரை மோசடி வழக்கு ஒன்றில் கேரள காவல்துறையினர் கைது செய்தனர். பாபுராஜுக்கு மூணாறு பகுதியில் சொகுசு ரிசார்ட் ஒன்று உள்ளது. இதை கடந்த 2020ஆம் ஆண்டு அருண் என்பவர் 40 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்து … Read more

Dhanush:எதிர்பார்த்தது போன்றே மீண்டும் 'அவருடன்' சேரும் தனுஷ்: ரசிகர்கள் செம ஹேப்பி

தனுஷ் அடுத்ததாக யாருடன் கூட்டணி சேர்கிறார் என்பது அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். தனுஷ்தனுஷுக்கு ராசியான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் வெற்றிமாறன். இதையடுத்து தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் தனுஷ். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை, அசுரன் ஆகிய படங்களில் நடித்தார் தனுஷ். அதில் அசுரனுக்காக மீண்டும் சிறந்த நடிகருக்கான தேசிய … Read more

'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன்

விஜய் நடிப்பில் வெளிவந்த 'வாரிசு' படத்தின் இசையமைப்பாளர் தமன், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். தெலுங்கில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கும், த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு மகேஷ்பாபு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தமனுக்கு எதிராக பல பதிவுகளைப் பதிவிட்டு டிரெண்டிங் செய்தனர். மகேஷ்பாபு நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'சர்க்காரு வாரி பாட்டா' படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார். அப்படத்தில் இடம் பெற்ற … Read more

உனக்கும் 67, எனக்கும் 67… ட்ரெண்டாகும் ‘T67’!!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படம் நடிகை த்ரிஷாவை மையப்படுத்தியும் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தொடர்ந்து நான்கு நாட்கள் அப்டேட் கொடுக்கப்பட்டது. முதலில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி, கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் உள்ளனர். அதே போல் 14 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா – விஜய் … Read more

Dhanush: வேலையில்லாமல் மன உளைச்சல்: பாவம், தனுஷுக்கே இப்படி ஒரு நிலைமையா!

தான் வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக தனுஷ் கூறியுள்ளார். தனுஷுக்கே இப்படி ஒரு நிலைமையா என சினிமா ரசிகர்கள் வியக்கிறார்கள். வாத்திவெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. தனுஷை வாத்தியாராக பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தனுஷ் சொன்ன ஒரு விஷயத்தை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். தனுஷ்தனுஷ் கூறியதாவது, வாத்தி … Read more

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி – கமல் படங்கள்!

தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பும் ஆந்திரா வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி … Read more

Leo, Trisha: லியோ படத்தில் இருந்து விலகுகிறாரா த்ரிஷா?: பரபரக்கும் சோஷியல் மீடியா

Trisha: விஜய் நடித்து வரும் லியோ படத்தில் த்ரிஷாவுக்கு உடன்பாடு இல்லையோ என சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். லியோலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படத்திற்கு லியோ என்று தலைப்பு வைத்து ப்ரொமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டனர். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். 14 ஆண்டுகள் கழித்து இந்த ராசியான ஜோடி மீண்டும் சேர்ந்து நடித்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிடுவாரோ என பேச்சு கிளம்பியிருக்கிறது. … Read more

உதவி இயக்குனர் – நடிகர் – இயக்குனர்: டி.பி.கஜேந்திரன் கடந்து வந்த பாதை

குடும்பச்சூழலை பின்னணியாக வைத்து திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர்கள் ஏ.பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு போன்ற வெற்றி பெற்ற இயக்குநர்களின் பட்டியலில் இயக்குநர் டி.பி.கஜேந்திரனுக்கும் ஒரு தனி இடமுண்டு. இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில். மறைந்த பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலக்ஷ்மி இவருடைய வளர்ப்புத் தாய் ஆவார். டி.பி.கஜேந்திரனும் அவரைப் போலவே சினிமா துறையை தேர்ந்தெடுத்தார். 1981ம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த “தில்லு முல்லு”திரைப்படத்தில் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். பின்னர் … Read more

Ajith Kumar: 'ஏகே 62' படத்திற்காக தாறுமாறாய் தயாராகும் அஜித்: தீயாய் பரவும் போட்டோஸ்.!

கடந்த மாதம் அஜித்தின் ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் தொடர்ச்சியாக மூன்று தடவை எச். வினோத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனையடுத்து அஜித்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தப்படத்தை யார் இயக்குவார்கள் என்ற குழப்பம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கடந்த 11 ஆம் தேதி அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியின் மூன்றாவது படைப்பாக ‘துணிவு’ வெளியானது. இந்தப்படம் ரசிகர்கள் … Read more