பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார் : திரையுலகினர் இரங்கல்
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா(86) வயது மூப்பால் ஐதராபாத்தில் காலமானார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழிலும் ‛மிஸ்ஸியம்மா, குழந்தையும் தெய்வமும்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவர் வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று(ஜன., 27) காலமானார். அவரது மறைவு தமிழ், தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். … Read more