சினிமாவை விட்டு விலகுகிறாரா சமந்தா? திடீர் முடிவால் ரசிகர்கள் கவலை!

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.  தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர்.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘யசோதா’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது.  சமந்தா தனது துறையில் ஒரு பக்கம் தொடர்ந்து சாதித்துக்கொண்டே வந்தாலும் மறுபுறம் அவர் பல கடினமான சூழ்நிலைகளையும் அனுபவித்து கடந்து வந்துகொண்டு இருக்கிறார்.  கடந்த … Read more

"திருமணம் குறித்து நினைத்தாலே பயமாக இருக்கிறது!"- பாடகி வைக்கம் விஜயலட்சுமி

கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி பிருத்விராஜ் நடித்த ’ஜே.சி.டேனியல்’ (மலையாளத்தில் `செல்லுலாய்டு’) படத்தில் இடம்பெற்ற ’காற்றே காற்றே’ என்ற தமிழ் டப்பிங் பாடல் மூலம் தமிழ் சினிமா பாடகியாக அறிமுகமானார். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், ’வீர சிவாஜி’ படத்தில் ’சொப்பன சுந்தரி நான்தானே’ என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைச் சொக்க வைத்தார். அதன் பிறகு எண்ணற்ற பாடல்கள் மூலமாக தனக்கென்று ஒரு ரசிகர் … Read more

Samantha: சமந்தா எடுத்த அதிரடி முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

டாப் நாயகிதமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சமந்தா. அதைத்தொடந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு விஜய்யின் கத்தி திரைப்படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதையடுத்து தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த சமந்தா முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் சமந்தா பிரிவுசமந்தா தான் காதலித்த நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். … Read more

Vanangaan: கழட்டிவிட்ட சூர்யா.. பாலா போடும் பலே திட்டம்: பரபரக்கும் கோலிவுட்.!

நடிகர் சூர்யா, பாலா கூட்டணியில் தொடங்கப்பட்ட படம் ‘வணங்கான்’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி நடைபெற்று வந்தது. இதனிடையில் ‘வணங்கான் படப்பிடிப்பின் போது சூர்யா, பாலா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குனர் பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணக்கம், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் … Read more

சித்ராவின் குரலில் உருக வைக்கும் ‛வாரிசு' – அம்மா பாடல்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள இந்த படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சரத்குமார், சங்கீதா, ஷாம் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் ஏற்கனவே ‛‛ரஞ்சிதமே…., தீ…' பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதிலும் விஜய் பாடிய ‛ரஞ்சிதமே' பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மூன்றாவதாக … Read more

கோலார் தங்க வயலில் ரசிகர்களை சந்தித்து பேசிய விக்ரம்

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது. இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடக … Read more

செல்லம்மா சீரியலிலிருந்து வெளியேற காரணம் இதுதான் : மனம் திறக்கும் திவ்யா கணேஷ்

விஜய் டிவியின் 'பாக்கியலெட்சுமி' மற்றும் 'செல்லம்மா' ஆகிய தொடர்களில் நடித்து வந்த திவ்யா கணேஷ், திடீரென செல்லம்மா தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து திவ்யா கணேஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலை விட்டு விலகினார் என்று சிலரும், அந்த தொடரின் நாயகன் அர்னவ் தான் காரணம் என்று சிலரும், டிஆர்பி குறைந்ததால்தான் விலகிவிட்டார் என்றும் பலவாறாக கருத்துகள் எழுந்தன. இந்நிலையில், சீரியலை விட்டு விலகியதற்கானக் காரணத்தை திவ்யா கணேஷ் அண்மையில் சோஷியல் மீடியா லைவ்வில் வந்த போது ரசிகர்களிடம் … Read more

'பிக் பாஸ்' – அடுத்த சீசனுக்கு 'பை பை' சொல்வாரா கமல்ஹாசன்?

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மீடியா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சியான 'பிக் பிரதர்' நிகழ்ச்சி, இந்தியாவில் ஹிந்தி டிவிக்களில் 'பிக் பாஸ்' என்ற பெயரில் முதன் முதலில் 2006ம் ஆண்டில் அறிமுகமானது. மூன்றாவது சீசனில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்க ஆரம்பித்த போது இந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தி வைத்தது. அதன்பின் சல்மான் கான் கடந்த பல சீசன்களாக தொகுத்து வழங்கி நிகழ்ச்சியை மேலும் பிரபலப்படுத்தினார். தமிழில் 2017ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் … Read more

புதிதாக கார் வாங்கிய இயக்குனர் சுதா – நண்பர்களுடன் ஜாலி டிரிப்

துரோகி படத்தில் இயக்குனரானவர் சுதா கெங்கரா. அதன்பிறகு இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற படங்களை இயக்கியவர் தற்போது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் சுதா கெங்கரா ஆடி நிறுவனத்தின் எலக்ட்ரிக் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த காரின் விலை 1.5 கோடி என்று கூறப்படுகிறது. இந்த காரில் தனது குருநாதரான இயக்குனர் மணிரத்னமை சந்தித்த சுதா … Read more

பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்

ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ , அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் அட்லீக்கும், நடிகை பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரியா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் அட்லீ. இந்த நிலையில் பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் … Read more