'ஆன்லைன்' ரம்மி சூதாட்ட விளம்பரம் : சரத்குமார் மீது போலீசில் புகார்

சென்னை: 'தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி, விளம்பரத்தில் நடித்த, நடிகர்கள் சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்ய வேண்டும்' என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் தமிழ்வேந்தன். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்: 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தால், தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 18 வயதுக்கு கீழ் உள்ள, சிறார்களுக்கும், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மூழ்கி கிடக்கினர். பலர் மன நலம் பாதிக்கப்பட்ட … Read more

மீண்டும் சொல்கிறேன் காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த மாதிரி படம்தான் – இயக்குநர் அதிரடி

53வது சர்வதேச கோவா திரைப்பட விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது. திரைப்பட விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் நிறைவு நாளில் பேசிய தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.  அவர் பேசுகையில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். … Read more

தெலுங்கில் முதல் வாரத்தில் 10 கோடி வசூலித்த 'லவ் டுடே'

பிரதீப் ரங்கநாதன் இயக்கம், நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'லவ் டுடே'. இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு நவம்பர் 25ம் தேதி வெளியானது. படத்திற்கு முதல் நாளிலிருந்தே இளம் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இளம் ரசிகர்கள் இப்படத்தை விரும்பிப் பார்த்துள்ளார்கள். முதல் வாரத்தில் மட்டும் இப்படம் சுமார் 10 கோடி வரை வசூலித்துள்ளது. அதில் பங்குத் தொகையாக மட்டும் 5 கோடி கிடைத்துள்ளது. இப்படம் அங்கு வெளியான போது வெளியான … Read more

ரன்வீர் சிங் – பூஜா ஹெக்டே நடித்துள்ள சர்க்கஸ் பட டிரைலர் வெளியீடு

விஜய்யுடன் நடித்த பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கில் சிரஞ்சீவி – ராம்சரண் நடித்த வெளியான ஆச்சாரியா படத்தில் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. அடுத்தபடியாக ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ள சர்க்கஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கி உள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். வருகிற டிசம்பர் 23ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகைக்கு படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் சர்க்கஸ் மற்றும் … Read more

தமிழைப் புறக்கணிக்கும் 'வாரிசு'

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'வாரிசு'. 2023 பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' வெளியாகி யு-டியூபில் 75 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்த சிங்கிளான 'தீ' என்ற பாடலை நாளை டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. இந்தப் படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அறிவிப்பிலும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்ப் படமாக உருவாகியுள்ள முன்னணி … Read more

‛வெண்ணிலா கபடி குழு' புகழ் ஹரி வைரவன் காலமானார்

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் காலமானார். மதுரையை சேர்ந்தவர் ஹரி வைரவன். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி விளையாடும் குழுவில் முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து நான் மகான் அல்ல, குள்ளநரிக் கூட்டம், வெண்ணிலா கபடி குழு 2 ஆகிய படங்களிலும் நடித்தார். அதன்பின் சினிமாவில் அவருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். நடக்க கூட சிரமமாக, … Read more

நடிகர் ‘வெண்ணிலா கபடி குழு’ ஹரி வைரவன் காலமானார்..!!

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பிரபல காமெடி ஆன பரோட்டா காமெடியில் ஹரிவைரவன் நடித்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், இரவு 12.15 மணியளவில் உயிரிழந்தார். நடிகர் அம்பானி சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் … Read more

தளபதி விஜய் படத்தில் ரன்வீர் சிங்கா? உண்மை என்ன?

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் பாலிவுட் பிரபலம் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘சர்க்கஸ்’ திரைப்படம் டிசம்பர் 23ம் தேதியன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது, மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகை வாரத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளது.  பிரபல ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘தி காமெடி ஆஃப் எரர்ஸ்’ என்கிற நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக கொண்டு இந்த ‘சர்க்கஸ்’ படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  ரோஹித் ஷெட்டி இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரன்வீர் சிங்குடன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், … Read more

What to watch on Theatre & OTT: இந்த டிசம்பர் முதல் வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

GOLD (மலையாளம், தமிழ்) GOLD இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘GOLD’ டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், ஜோஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். மொபைல் ஷாப் ஓனரான ஜோஷின் வீட்டு வாசலில் திடீரென்று ஒரு நாள் இரவு மர்மமான ஒரு பொலீரோ லோட் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த காரில் என்ன இருக்கிறது, அது ஜோஷின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது, என்பதுதான் … Read more

வெண்ணிலா கபடி குழு புகழ் ஹரி வைரவன் காலமானார்!

வெண்ணிலா கபடி குழு புகழ் ஹரி வைரவன் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்