Run Baby Run Review: திருப்பங்கள் நிறைந்த க்ரைம் த்ரில்லர்; ஆர்.ஜே.பாலாஜியின் புது அவதாரம் எப்படி?
தொடர்ந்து காமெடி, அரசியல் நையாண்டி என ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடங்கும் நடிகராகவே வலம்வந்த ஆர்.ஜே.பாலாஜி `ரன் பேபி ரன்’ (Run Baby Run) மூலம் க்ரைம் த்ரில்லர் களத்தில் குதித்திருக்கிறார். அவரின் இந்தப் புதிய அவதாரம் எப்படியிருக்கிறது? செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றிவரும் ஆர்.ஜே பாலாஜிக்கும், இஷா தல்வாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு பிரச்னை காரணமாக பாலாஜியின் காரில் வந்து ஒளிந்துகொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னைச் சிலர் துரத்துவதாகவும், தன் உயிருக்கே … Read more