‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: ‘மன்னிப்பு கேட்டுக்கிறேன்… ஆனால் நான் சொன்னது..’ – நடாவ் லாபிட்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்த தனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இயக்குநர் நடாவ் லாபிட், ஆனால் நான் அந்தப் படம் குறித்து கூறியது உண்மைதான் என்றும் தெரிவித்துள்ளார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் கடந்த மாதம் 20-ம் தேதி துவங்கி, 28-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 … Read more

காசேதான் கடவுளடா டிசம்பர் 23ம் தேதி ரிலீஸ்

முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 1972ம் ஆண்டில் வெளியான படம் காசேதான் கடவுளடா. ஏவிஎம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த படத்தை ஆர்.கண்ணன் ரீமேக் செய்திருக்கிறார். இதில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதமே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் செய்தியை மாற்றி வைத்தார்கள். தற்போது … Read more

கிளாமர் லேடியின் கியூட் மகனா இவர்? ரேஷ்மா மகனை பார்த்த நெட்டிசன்களுக்கு விய்ப்பு

விஜய் டிவி பாக்யலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் வில்லியாக வரும் ரேஷ்மாவை தமிழக சீரியல் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு வில்லி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். இதனால், சீரியல் பார்க்கும் பெண்கள் மத்தியில் அவர் மீது கோபமே இருக்கிறது. இருந்தாலும், நடிப்பைக் கடந்து சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருக்கிறார் ரேஷ்மா. இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா பசுபுலெட்டி புகைப்படம் பதிவிடாவிட்டால், அவரது ரசிகர்கள் அவ்வளவு தான். அடுத்த போட்டோ … Read more

காந்தாரா படம் பேசியிருக்கும் அரசியலில் இத்தனை ஆபத்துகளா? மேக்கிங்கில் புதைந்த உண்மைமுகம்!

சமீபத்திய திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட படம் காந்தாரா! சிறப்பான மேக்கிங் காட்சிகளால் பெரும்பாலன மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு நல்ல படத்திற்கு சிறப்பான மேக்கிங் மட்டும் போதுமா? அது பேசியிருக்கும் அரசியல் குறித்து பொருட்படுத்த தேவையில்லையா?  காந்தாரா படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டியின் இயக்கமும், நடிப்பும் நிச்சயம் பாராட்டுக்குரியது தான். அதற்காக ஒரு துளி விஷம் தானே என்று செரித்துகொள்ள முடியுமா என்ன?  எப்போது ஒரு படம் சிறுபான்மையினரையும், விளிம்பு நிலை மக்களை பற்றி பேசும் போது அதில் அறமும், அக்கறையும் இருக்க வேண்டியது அடிப்படையான தார்மீகம். … Read more

தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி

இயக்குனர் லிங்குசாமி கடைசியாக ராம் பொத்தனேனி நடிப்பில் தி வாரியர் படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இந்த நிலையில் என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட கழகத்திற்கு 2 படங்களை தயாரித்து கொடுக்கிறார். இதில் ஒரு படத்தை ரேணிகுண்டா, வயது 18 படங்களை இயக்கிய பன்னீர் செல்வமும், ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இன்னொரு படத்தையும் இயக்குகிறார்கள். “என்.எப்.டி.சிக்கு 2 படங்களை … Read more

வாரிசு – ஜனவரி 12 வெளியீடு என அறிவித்த வெளிநாட்டு வினியோகஸ்தர்

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரிசு'. இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்று மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தத் தேதியில் வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காமலே உள்ளது. இதனிடையே, இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ள பார்ஸ் பிலிம் கம்பெனி தாங்கள் இப்படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிடுகிறோம் என்ற அறிவிப்புடன் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று தேதியையும் குறிப்பிட்டுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே … Read more

கார்த்திக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன்தாரா! சீக்ரெட்டை வெளியிட்ட லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா திரைப்படம் மெகாஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இவருக்கும் சூப்பராக கெமிஸ்டிரி வொர்க்அவுட் ஆனதால் சிறுத்தை மற்றும் தோழா ஆகிய திரைப்படங்களில் அடுத்தடுத்து ஜோடியாக நடிக்கத் தொடங்கினர். ஆனால், பையா பட வாய்ப்பு முதலில் தமன்னாவுக்கு செல்லவில்லை. நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என இயக்குநர் லிங்குசாமி முடிவெடுத்து, அவரை அணுகியுள்ளார். ஆனால், ஏதோ காரணத்தால் அப்போது அந்த பட வாய்ப்பை தட்டிகழித்துவிட்டார் நயன்தாரா. … Read more

தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி

பிக்பாஸ் வீட்டில் அடாவடியாக விளையாடி அதகளம் செய்து கொண்டிருக்கிறார் டிக் டாக் தனலெட்சுமி. இந்த சீசனில் தனலெட்சுமி பிக்பாஸ் வீட்டில் விளையாடுவதை வைத்து அவரை நெட்டிசன்கள் ஜூலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். ஏனெனில் இவர்கள் இருவருமே பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் போது தங்களை சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், கேமராவையே பார்த்தது இல்லை என்றும் கூறியிருந்தனர். ஆனால், இருவருமே பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன் ஊடகம், டிக் டாக், குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்கள் தான். பிக்பாஸ் வீட்டிலும் … Read more

அவதார் 2 வெளியாவதில் சிக்கல்…. ரசிகர்கள் அதிர்ச்சி

டைட்டானிக்,  டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். இப்படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்திருக்கிறது. இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை கேமரூன் தொடங்கினார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. டால்பி ப்ரீமியம் 4k உடன் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகியிருக்கும் இப்படமானது உலகம் முழுவதும், 160 … Read more

ரஷ்யாவில் 'புஷ்பா' படக்குழு

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளியான தெலுங்குப் படம் 'புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் சுமார் ரூ.300 கோடி வரை வசூலித்தது. அப்படத்தைத் தற்போது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து அடுத்த வாரம் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். இன்றும், நாளையும் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் படத்திற்கான பிரிமீயர் காட்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக புஷ்பா படக்குழுவினர் … Read more