சினிமாவில் நடிக்கும் 'கண்ணான கண்ணே' அக்ஷிதா

நடிகை அக்ஷிதா போபைய்யா டிவி தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கண்ணான கண்ணே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், அக்ஷிதாவுக்கு கன்னடத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 'FIR-6' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் ராகவேந்திராவுக்கு ஜோடியாக அக்ஷிதா நடிக்க உள்ளார். இவர் நடிப்பில் வெளியான போலீஸ் திரில்லர் திரைப்படமான 'சீதாராம் பினாய்: கேஸ் நம்பர் 18' தென்னிந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இதுவும் ஒரு … Read more

KGF 2 படத்தை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்… ரசிகர்கள் ஆதரவு..!

கடந்த ஒரு வாரகாலமாக பீஸ்ட் மற்றும் KGF படத்தைப்பற்றிய பேச்சுதான் போய்க்கொண்டிருக்கிறது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கடுமையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. மறு பக்கம் KGF இரண்டாம் பாகம் வசூலிலும் விமர்சனங்களிலும் கலக்கி கொண்டு வருகின்றது. மேலும் பீஸ்ட் படத்தில் விஜய் அதிக தொகையை சம்பளமாக வாங்கியதால் படத்தின் தரம் சிறப்பாக இல்லையென்றும், தமிழ் சினிமாவை காட்டிலும் மற்ற மொழி திரைப்படங்கள் சிறப்பாக இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மிகப்பிரமாண்டமான படைப்பில் … Read more

புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய் போல விளம்பர படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிராமல், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் விளம்பர படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் ரெட் பஸ். ராபிடோ என போக்குவரத்து சம்பந்தமான விளம்பரங்களில் நடித்து வந்த அல்லு அர்ஜுனை தேடி மிகப்பெரிய நிறுவனம் ஒன்று தங்களது புகையிலை தயாரிப்பு ஒன்றின் விளம்பரப்படத்தில் நடிப்பதற்காக அணுகியுள்ளனர். இதற்காக கோடிகளில் சம்பளம் தரவும் அவர்கள் தயாராக … Read more

கீர்த்தி பாணிடியன் நடிப்பில் உருவான புதிய படத்தின் அப்டேட்…!

நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.இளம் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கிரி மூர்ப்பி என்பவர் இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வினோத் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த வயசுல தேவையா தலைவரே?: ரஜினி ரசிகர்கள் கவலை … Read more

KGF 2 or Beast? வசூலைக் குவித்தது எது? – உண்மையை விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

`பீஸ்ட்’, `கே.ஜி.எஃப்-2′ ஆகிய படங்கள் வெளியாகி ஒருவாரம் நெருங்கிய நிலையில், அதன் வசூல்கள் குறித்து பேச்சு இன்னமும் பெரிய விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினேன். `பீஸ்ட்’, `கே.ஜி.எஃப்-2′ – ரெண்டுல எந்தப் படம் அதிக வசூலைக் கொடுத்துட்டு வருது? `கே.ஜி.எஃப்-2′ ஸ்க்ரீன்ஸ் அதிகப்படுத்தி இருக்காங்களா? “தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விஜய் படத்துக்கு வரவேற்பு இருக்கு. மொத்தம் உள்ள ஆயிரம் தியேட்டர்கள்ல தொள்ளாயிரம் தியேட்டர்கள்ல ‘பீஸ்ட்’ படத்தைத் திரையிடத்தான் விரும்பினோம். … Read more

”குறைப்பிரசவம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”-வீடியோ வெளியிட்ட பாக்யராஜ்

மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் பாக்யராஜ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், அதற்கு வீடியோ காட்சி மூலம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். “பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த நூலை வெளியிட்டார். அவரிடமிருந்து இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘’எப்படி … Read more

சிரஞ்சீவியின் படப்பிடிப்பில் இணைந்த ஸ்ருதிஹாசன்

நடிகர் சிரஞ்சீவி அரசியலில் இருந்து ஒதுங்கியபின் மீண்டும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு படம் என மித வேகத்தில் நடித்து வந்தவர், தற்போது வேகம் கூட்டியுள்ள நிலையில், கைவசம் நான்கைந்து படங்களை வைத்துள்ளார். அந்தவகையில் அவரது ஆச்சார்யா படம் ரிலீஸுக்கு தயாராக இருக்க, மோகன்ராஜா இயக்கத்தில் மலையாள லூசிபர் ரீமேக்காக உருவாகும் காட்பாதர் படத்திலும் நடித்து முடித்துவிட்டார் சிரஞ்சீவி. இதையடுத்து அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கான போலோ … Read more

நான் பாஜக கிடையாது: அந்தர்பல்டி அடித்த இயக்குனர் பாக்யராஜ்..!

பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த நூலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசியுள்ளது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசியபோது, ‘அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றினார். நான் கர்நாடகத்தில் இருந்தபோது அவரைப் பற்றி பெருமையாக பேசுவதை கேட்டு ஆச்சரியப்பட்டேன். பாஜகவுக்கு சரியான தலைவரை தேர்வு செய்துள்ளார்கள். … Read more

”போலி ஆவணங்கள்மூலம் என்னை தயாரிப்பாளர் மிரட்டுகிறார்” – நடிகர் விமல் பரபரப்பு புகார்

தயாரிப்பாளர் சிங்காரவேலன் போலி ஆவணங்கள் மூலம் தன்னுடைய பட தயாரிப்பாளர்களை பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் விமல் சென்னை காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். நடிகர் விமல் 5 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் கோபி என்பவர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். “மன்னர் வகையறா” படத்திற்காக பணம் வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு விருகம்பாக்கம் காவல் … Read more

எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு விருந்தளித்த ராம்சரண்

ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள், அதன்பிறகு ரிலீஸ் மற்றும் படத்தின் வெற்றி கொண்டாட்டாங்கள் எல்லாம் முடிந்த நிலையில், ஒரு தயாரிப்பாளராக தனது தந்தை சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளார் நடிகர் ராம்சரண்.. அது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடிக்கவும் துவங்கியுள்ளார் ராம்சரண். சமீப நாட்களாக பஞ்சாப்பில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் … Read more