ஐயோ…! கூச்சமாக இருக்கு…! வீட்டிற்கு வெளியே போனாலே எல்லாரும் என்னை இப்படிதா அழைக்கிறாங்க…!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா . ‘ பாணா காத்தாடி ‘ திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான சமந்தா ‘நீ தானே என் பொன்வசந்தம்’, ‘ மெர்சல் ‘, ‘ சூப்பர் டீலக்ஸ் ‘ ‘ தெறி ‘ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் சமந்தாவின் அறிமுகப் படமே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ரீமேக்தான். அந்தப் படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் ஒன்றாக … Read more

"பழைய மாருதி 800 ல பயணிச்ச சேது அண்ணா…" – மனம் திறக்கும் சந்தோஷ் நாராயணன்!

சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர். தனது வெரைட்டியான பாடல்கள், பின்னணி இசையின் வழியே தனக்கென தனியிடத்தைப் பிடித்தவர். அவர், தமிழ் சினிமாவில் இசையமைக்கத் தொடங்கி 10 வருடங்கள் ஆகிறது. `மகான்’, `கடைசி விவசாயி’ என சமீபத்தில் இசையமைக்கும் படங்கள் குறித்தும் அவரிடம் பேசியதிலிருந்து… ” `கடைசி விவசாயி’ கதை கேட்கும்போது எப்படி இருந்தது?” “படத்தை எனக்கு தியேட்டர்ல ஸ்க்ரீன் பண்ணி காமிச்சாங்க. படத்த பாத்துட்டு நான் ஸ்டன் (stun) ஆகிட்டேன். அந்தப் படம் … Read more

ஆந்திர முதல்வரை சந்திக்க ஒரே விமானத்தில் பயணித்த நடிகர்கள்

ஆந்திர மாநிலத்தில் கடந்த வருடம் சினிமா டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த அம்மாநில அரசு உத்தரவிட்டது. மிகப் பெரும் பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் அவ்வளவு குறைந்த கட்டணத்தை வசூலித்தால் தியேட்டர்காரர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்காது. இது தொடர்பாக தெலுங்குத் திரையுலகத்தினர் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். ஆந்திர மாநில மந்திரிகளுடனும் சிலர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோர் … Read more

அட உண்மையிலேயே இது நம்ம திவ்யபாரதிதானா…? கல்லூரியில் படித்தபோது இருந்ததற்கும் இப்ப இருப்பதற்கும் சம்பந்தமே இல்லையே…?

ப்பாபேச்சுளர் படத்தில் இளசுகளின் நெஞ்சை கொள்ளை கொண்ட திவ்ய பாரதிய இது – கல்லூரி புகைப்படத்தில் எங்க இருக்கார்னு கூட கண்டுபிடிக்க முடியல.தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜி.வி.பிரகாஷ் இருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர் , பாடகர், நடிகர் என பல துறைகளில் கால் பதித்துள்ளார்.இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். … Read more

விஷ்ணு விஷாலின் `FIR' படத்திற்கு சில நாடுகளில் தடையா? பின்னணி என்ன?

விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்.’ படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் ‘இப்படம் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது’ எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. விஷ்ணுவும், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மலேசிய, குவைத் ஆடியன்ஸ் மன்னிக்கவும்’ என ட்வீட்டியிருக்கிறார். படத்தை புரோமோட் செய்யும் பொருட்டு ட்விட்டரில் தனது பெயரை இர்ஃபான் அஹமத் என மாற்றியிருக்கிறார். இது படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர். FIR இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து, நடித்திருக்கிறார். இப்படம் 22 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது … Read more

தலைவருடன் கைகோர்க்கும் நெல்சன்-அனிரூத்

தலைவருடன் கைகோர்க்கும் நெல்சன்-அனிரூத் 2/10/2022 6:25:40 PM சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படத்தை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். கோலிவுட்டில் ‘கோலமாவு கோகிலா’  மூலம் காலடி எடுத்து வைத்த இயக்குநர் நெல்சனுக்கு, அந்தப் படம் மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. வசூல் ரீதியாகவும் ஹிட்டானதால், அடுத்த படத்தில் தனது நண்பரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே வெளியான டாக்டர், வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் … Read more

முதல் சிங்கிள் மோதலுக்குத் தயாராகும் விஜய், மகேஷ் பாபு ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் விஜய் எந்த அளவுக்கு ரசிகர்களை வைத்திருக்கிறாரோ, அதே அளவிற்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களை வைத்திருப்பவர் மகேஷ்பாபு. இவரது சில படங்களை விஜய் ரீமேக் செய்து வெற்றி பெற்றதால் மகேஷ் பாபு, விஜய் இருவரது இடையிலான ஒப்பீடு அடிக்கடி சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது. விஜய், மகேஷ் பாபு ஆகியோரது ரசிகர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இதனிடையே, விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளும், மகேஷ் பாபு நடித்து … Read more

நடிகர் விஜய் மகன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் கமிட் ஆன துருவ் விக்ரம்…!

சினிமா திரை உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் தனெக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் விக்ரம். விக்ரம்அவரது கடின உழைப்பால் பல ஆண்டு காலமாக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விக்ரம் … Read more

சன் பிக்சர்ஸ் – ரஜினி – நெல்சன் கூட்டணி… ஏப்ரலில் பூஜை, மே மாதம் படப்பிடிப்பு!

சன் பிக்சர்ஸ் இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறது என ட்விட்டரில் அறிவித்திருக்கிறது. இது பற்றி தயாரிப்புத் தரப்பில் விசாரித்தோம். அதற்கு முன்பாக, சன் பிக்சர்ஸ் இப்போது விஜய்யின் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ உள்பட பல படங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் ரஜினியை வைத்து படம் தயாரிக்கவிருப்பதாகவும் அதை ‘பீஸ்ட்’ நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்றும் சில நாள்களாகவே கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது. விஜய்யின் ‘பீஸ்ட்’ நூறாவது நாள் … Read more

ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போகும் தி பவர் ஆப் தி டாக்

திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. விருது போட்டிக்கு தகுதி பெறும் படங்களின் பட்டியலை ஆஸ்கர் விழாக்குழு அறிவித்துள்ளது. பெல்பாஸ்ட், கோடா, டோண்ட் லாக்அப், டிரைவ் மை கார், டியூன், கிங் ரிச்சர்ட், லிகோரியா பீட்சா, நைட்மேர் அலே, தி பவர் ஆப் டாக், வெஸ்ட் சைட் ஸ்டோரி ஆகிய படங்கள் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் தி பவர் ஆப் தி … Read more