‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் நாட்டு, நாட்டு பாடல் 5 மொழிகளில் இன்று வெளியீடு

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் இன்று மாலை 4 மணிக்கு யூ-ட்யூப்பில் வீடியோவாக வெளியாகிறது. ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானப் படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 550 கோடி ரூபாய் … Read more

நேரடியாக டிவியில் வெளியாகும் ஜெய் படம்

வீரபாண்டியபுரம் படத்திற்கு பிறகு ஜெய் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி உள்ள படம் குற்றம் குற்றமே. இந்த படத்தில் திவ்யா துரைசாமி, பாரதிராஜா, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படம் நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமிய பின்னணியில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் … Read more

இது எதுல போய் முடியப்போகுதோ? தனுஷுடன் போட்டி போடும் செல்வராகவன்!

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன் . தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக அவரது இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியானது. தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதனிடைய இயக்குநர் செல்வராகவன் நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷுடன் சாணிக் காயிதம் படத்தில் நடித்துள்ளார் செல்வராகவன். கடவுளுடன் ஒப்பிட்ட விஜய்… எஸ்ஏசி செம ஹேப்பி… என்ன சொல்லியிருக்கார் பாருங்க! அதனை தொடர்ந்து விஜய்யின் … Read more

‛தமிழ் தான் இணைப்பு மொழி' : அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

சென்னை : மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்த ஹிந்தி தொடர்பான கருத்துக்கு பதில் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛‛தமிழ் தான் இணைப்பு மொழி'' என கூறி உள்ளார். தமிழகத்தில் அவ்வப்போது ஹிந்தி தொடர்பான சர்ச்சைகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் அமித் ஷா, ‛‛ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும்'' என கூறினார். இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பலரும் கருத்து பதிவிட்டனர். ஒரு மொழியை … Read more

நடிகர் விஜய் திரைப்படங்களும் விடாமல் துரத்தும் சர்ச்சைகளும் -துப்பாக்கி முதல் 'பீஸ்ட்' வரை

ஏப்ரல் 13 அன்று நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “பீஸ்ட்” வெளியாக உள்ள நிலையில், கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை விஜய் நடித்த படம் வெளியாகும் போதும் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். தனது ரசிகர்களின் நெஞ்சில் ‘தளபதி’யாக குடியிருப்பவர். ஏப்ரல் 13 அன்று நெல்சன் இயக்கத்தில் வெளியாக உள்ள “பீஸ்ட்” படம் குறித்த டாக்தான் இப்போது கோலிவுட் … Read more

அமெரிக்காவில் மட்டுமே 100 கோடி வசூலித்த 'ஆர்ஆர்ஆர்'

இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்காவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடப்பது மாபெரும் சாதனை. அந்த சாதனையை ராஜமவுலி மீண்டும் செய்திருக்கிறார். அவரது இயக்கத்தில் 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. அப்போது அந்தப் படம் யுஎஸ் டாலர் மதிப்பில் சுமார் 20 மில்லியன் வசூலித்தது. அந்த சமயத்தில் யுஎஸ் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாயாக இருந்தது. இப்போது 'ஆர்ஆர்ஆர்' படம் 100 கோடி வசூலைக் … Read more

ட்ரிங்க்ஸ் பார்ட்டியில் கமல் என்ன செஞ்சார் தெரியுமா?: குண்டை தூக்கிப் போட்ட நித்யா

நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையேயான பிரச்சனை அனைவருக்கும் தெரியும். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டார்கள். மீண்டும் சேர்வார்கள் என்று எதிர்பார்த்தும், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கமல் ஹாசன் ஒரு வொர்ஸ்ட் கேரக்டர் என்று நித்யா அண்மையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது பேட்டி ஒன்றில் மீண்டும் கமல் பற்றி பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் நித்யா கூறியதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் … Read more

விஜய்யின் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரில் ஒரு பீஸ்ட் பயணம்

நடிகர் விஜய் தமது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரில் பீட்ஸ் படக்குழுவினரை அழைத்துச்சென்று உற்சாகப்படுத்தினார். நடிகர் விஜய் ஓட்டிச்சென்ற அந்த சொகுசு காரில் இயக்குநர் நெல்சன், மனோஜ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், சதீஷ் ஆகியோர் பயணித்தனர். பீஸ்ட் படப்பிடிப்பின்போது காரில் பயணித்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே ‘பீஸ்ட்’ மோடில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த வீடியோ மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், ‘மாஸ்டர்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு நடித்துள்ள படம் … Read more

தெலுங்கு படத்தை இயக்கும் ஹரி?

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது ஹரி அருண் விஜய் நடிப்பில் யானை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகின்ற மே 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஹரி அடுத்ததாக தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் ஷங்கர் … Read more

பீஸ்ட் பட பாடலுக்கு அரை குறை உடையில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி…!

பீஸ்ட் படத்தில் வரும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு தரமான ஆட்டம் போட்டுள்ளார் ஷிவானி .அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ஏராளமான ரசிகர்கள் அவரது ஆட்டத்தை வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர்.ஷிவானி தற்போது கமலின் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும் கார்த்திக் … Read more