மாநாடு சீக்கிரம் முடிந்ததன் பின்னணி என்ன? | Highlights of TVK Vijay Madurai Maanadu | Vikatan

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மாநாட்டுக்காக தவெக சார்பில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே மாநாடு நடந்தது. விஜய் 35 நிமிடங்கள் மட்டுமே பேசியிருந்தார். இதன் பின்னணி என்ன? மேலும், விஜய் தனது தொண்டர்களுக்கு என்ன செய்தியை கடத்த விரும்புகிறார். மாநாட்டுத் திடலிலிருந்து ஒரு ஸ்பாட் ரிப்போர்ட். Source link

இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனைபயணம் டிசம்பரில்….! இஸ்ரோ தலைவர்

டெல்லி: இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில்  (2025) மேற்கொள்ளப்படும்  என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான், இந்த ஆண்டு டிசம்பரில் அதன் முதல் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் இன்று தெரிவித்தார். அதன்படி முதற்கட்டமாக ரோபோவுடன் ககன்யான் சோதனை பயணம் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரோ … Read more

சுதந்திரமாக இருக்க விரும்பினால் திருமணமே செய்திருக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, சிங்கப்பூரில் வசித்து வரும் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி அவரை பிரிந்து ஐதராபாத்தில் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, இளைய மகனின் பிறந்தநாள் 23-ந் தேதி வருவதால், அதை கொண்டாட கணவர் இந்தியா வந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு … Read more

TVK: “கச்சத் தீவு பற்றிப் பேசியவர் ஏன் காங்கிரஸ் குறித்துப் பேசவில்லை'' – விஜய்க்கு தமிழிசை கேள்வி

நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் உரையாற்றிய நடிகர் விஜய் பிரதமர் மோடியையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கச்சத் தீவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும் பேசினார். இந்த நிலையில், தவெக தலைவரின் பேச்சுக்கு பதிலளித்த பா.ஜ.க-வின் முன்னாள் ஆளுநரும் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். … Read more

சென்னையில் இன்று காலை முதலே பரவலாக மிதமானது முதல் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை காலை முதலே  பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையில், பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், … Read more

காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம்: மாயமான 33 பேரை தேடும் பணி தீவிரம்

ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி அதிகனமழை கொட்டியது. இதில் மச்சைல் மாதா கோவிலுக்குச் செல்லும் புனித யாத்திரை வழித்தடத்தில் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. ஒரு தற்காலிக சந்தை மற்றும் பாத யாத்திரை பயணிகள் சமையல் செய்து சாப்பிடும் தளம் ஆகியவற்றை வெள்ளம் முற்றிலும் சேதப்படுத்தியது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தற்போதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இந்த … Read more

ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்

முதல் முறையாக 125cc சந்தையில் க்ரூஸ் கண்ட்ரோல் பெற்ற ஹீரோ மோட்டோகார்ப் கிளாமர் X 125  பைக்கினை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 5 மிக முக்கியமான அம்சங்களில் மைலேஜ், எஞ்சின், விலை உட்பட முக்கிய மாற்றங்களை அறியலாம். Cruise Control எப்பொழுது இயங்கும், எப்படி இயக்க வேண்டும்? மணிக்கு 30 கிமீ வேகத்தை கடந்தால் க்ரூஸ் கண்ட்ரோல் இயங்க துவங்கும், இயக்க வலதுபுறத்தில் உள்ள க்ரூஸ் பொத்தானை அழுத்தினால் Set Speed என டிஸ்பிளேவில் வந்து … Read more

Trump 50% Tariff: “அமைதியாக இருந்தால் கொடுமை அதிகரிக்கும்'' – இந்தியா உடன் கைகோர்க்கும் சீனா!

இந்தியா மீது இந்த மாதத்தின் தொடக்கத்தில் 25 சதவிகிதம் தான் வரி போட்டது அமெரிக்கா. அடுத்ததாக, இந்தியா ரஷ்யா உடன் வணிகம் செய்கிறது என்று 50 சதவிகிதமாக வரி உயர்த்தப்பட்டது. சீனாவிற்கு ‘அதிக’ வரி இல்லை! ஆனால், ரஷ்யா உடன் அதிகம் வணிகம் செய்யும் நாடான சீனா மீது இப்படி எந்த அதிக வரியும் விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு போடப்பட்ட 30 சதவிகித வரியே நவம்பர் மாதம் வரை அமலில் இருக்கும். இதற்கு அமெரிக்கா – சீனா இடையே … Read more

மதுரை மாநாட்டில் விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்த விஜய்; பிரேமலதாவின் ரியாக்சன் என்ன?

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது. இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், “நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அவர் யார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது எம்.ஜி.ஆர் தான். அவரோடு பழகுவதற்கு … Read more