கரூர் துயர சம்பவம் குறித்து நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலர் வரதராஜனுக்கு ஜாமின் மறுப்பு…

சென்னை: கரூர் துயர சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தவெக தலைவர் விஜய் விமர்சித்தை,  பிரபல யுடியூபரும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான   வரதராஜன் விமர்சித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்க சென்னை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கடந்த 7ந்தேதி கைது … Read more

மரணம் குறித்து முன்கூட்டியே உணர முடியுமா? – அறிவியல் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

மரணம் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று. இருப்பினும் சிலர் தங்களது இறுதி நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அது குறித்து சுற்றுத்தார்களிடம் கூறுவார்கள். தங்களின் கடைசி ஆசை அல்லது எதிர்காலத்தில் இவ்வாறு இருங்கள் என்று அறிவுரை கூறுவது என தங்களின் இறுதி நேரத்தை நெருங்கி விட்டதை உணர்ந்து வித்தியாசமான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். இது தற்செயலான நிகழ்வாக கருதப்பட்டாலும், இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி இதழில் வெளியான ஒரு … Read more

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! இந்திய வானிலை மையம் தகவல்..

சென்னை: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் … Read more

"மணத்தி கணேசன் முதல்ல ஹாக்கி சாம்பியன்; பிறகுதான் கபடி" – ‘பைசன்’ நிஜ நாயகன் குறித்து உறவினர் பேட்டி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘பைசன்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திருச்செந்தூர் அருகேயுள்ள மணத்தி கிராமத்தில் பிறந்து கபடியில் சாதித்து அர்ஜுனா விருது வரை வாங்கி, தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் கணேசன் என்பவரது நிஜ வாழ்க்கையை கருவாக வைத்து படம் எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்நிலையில் தற்போது சென்னையில் வசிக்கும் கணேசனின் உறவினரும் கணேசன் படித்த சாயர்புரம் போப் பள்ளியில் அவருக்கு ஜூனியருமான அருள்ராஜிடம் பேசினோம். மாரி செல்வராஜ் ‘’எனக்கு … Read more

பீகார் தேர்தல் போட்டியிடவில்லை! பிரஷாந்த் கிஷோர் திடீர் பல்டி…

பட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி வந்த  ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே)  திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து, அவரது கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை  கொடுத்துள்ளார். 243  தொகுதிகளைக்கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு  இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, . அதன்படி, நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், நவ.14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும்  தேர்தல் ஆணையம் … Read more

Deepavali: அதிரசத்தோட ரூல் புக் படிச்சிருக்கீங்களா? இது அதிரசத்தோட Nostalgia பகிர்வு

அதிரசம்… பேர் என்னவோ இனிப்பு பலகாரம்தாங்க. ஆனா, இது வாங்குற வேலையிருக்கே… அப்பப்பா..! இன்னிக்கு ஆர்டர் போட்டா இனிக்க இனிக்க வீடு தேடி வந்திடுது அதிரசம். ஆனா, கால் நூற்றாண்டுக்கு முன்னாடி வரைக்கும் தீபாவளிக்கு அதிரசம் சுடுறதுங்கிறது மிகப்பெரிய டாஸ்க். சென்ற தலைமுறையினர் அதிரசம் செய்ய பட்டபாடுகளையாவது நாம தெரிஞ்சுக்கலாமா..? அதிரசம் அதிரசத்தோட ரூல் புக்..! முதல்ல அதிரசத்தோட ரூல் புக்கை படிச்சிடுவோம். இளம் பிரவுன் நிறத்துலதான் இருக்கணும். ஒரு செகண்டு அதிகமா வெந்துட்டாலும் தீய்ஞ்ச நிறம் … Read more

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 33 மார்க் எடுத்தாலே ‘பாஸ்..’! கர்நாடக அரசு

பெங்களூரு: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 33 மார்க் எடுத்தாலே ‘பாஸ்..’   என கர்நாடக  மாநில காங்கிரஸ் அரசு  அறிவித்துருள்ளது. தேர்வு முடிகளில் சில மாற்றங்களை  செய்து அறிவித்துள்ளது. கர்நாடக மாநித்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC /10வது வகுப்பு), பி.யூ.சி (PUC / 12ம் வகுப்பு )  ஆண்டு பொதுத்தேர்வுகளில் இந்த கல்வியாண்டு முதல் 30 முதல் 33 மதிப்பெண்கள் வரை எடுத்தாலே   மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.  ஏற்கனவே பாஸ் … Read more

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதல்: "காட்டுமிராண்டித்தனமானது" – ரஷித் கான் கண்டனம்

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல்களும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் போர் நடக்கக்கூடும் அபாயம் இருப்பதால், 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும் எனக் கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர், … Read more

குடியரசு தலைவர் முர்மு 22ந்தேதி சபரிமலை வருகை – பக்தர்களுக்கு தடை

திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக சபரி மலை அய்யப்பனை தரிசிக்க  கேரளா வருகை தர உள்ளார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன், அன்றைய தினம் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர் ஒருவர் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 22 ஆம் தேதி (புதன்கிழமை) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபடுகிறார். இதையொட்டி, வரும் 21 ஆம் தேதி வரை … Read more

போலந்து: 15 வயதில் மகளைப் பூட்டி வைத்த பெற்றோர்; 42 வயதில் காவலர்களால் மீட்கப்பட்டது எப்படி?

போலந்து நாட்டில் 15 வயது மகளை, பெற்றோர் 27 ஆண்டுகளாக ஒரு சிறிய அறைக்குள் பூட்டி வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நடக்கக் கூட முடியாத நிலையில் 42 வயதில் அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார். போலந்தின் ஸ்விடோச்லோவிஸ் நகரில்தான் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரேலா என்ற 42 வயது பெண், அவரது பெற்றோரால் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு தனது 15 வயதில் கடைசியாக வெளியில் காணப்பட்ட … Read more