டெவால்ட் பிரெவிஸ் விவகாரத்தில் நடந்தது என்ன? – அடுத்தடுத்து விளக்கம் கொடுத்த சிஎஸ்கே & அஸ்வின்

ஐபிஎல் 2025 சீசனின் பாதியில், காயம் காரணமாக விலகிய குர்ஜப்நீத் சிங்கிற்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தென்னாப்பிரிக்க இளம் வீரர் `பேபி ஏபி’ என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸை மாற்று வீரராக 2.2 கோடி மதிப்பில் வாங்கியது. அதைத்தொடர்ந்து தான் களமிறங்கிய போட்டிகளில் டெவால்ட் பிரெவிஸ், அடுத்த சீசனிலும் அணியில் தனது இடத்தை தக்கவைக்கும் வகையில் அதிரடி காட்டினார். டெவால்ட் பிரெவிஸ் இவ்வாறிருக்க, ஐ.பி.எல் சீசன் முடிந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில், … Read more

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய மத்திய அமைச்சர்…

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் ஆதரவு கோரி,  முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே  நட்பு  இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற  தி.மு.க-வின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, அவரது உருவம் பொறித்த … Read more

கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு – பரபரக்கும் நாமக்கல் மாவட்டம்…

நாமக்கல்: ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களை ஏமாற்றி கிட்னி திருடப்பட்ட சம்பவம் அதிர்கலைகளை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தில், தற்போது கல்லீரல் திருட்டு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல வேறு சிலருக்கும்  முறையான அனுமதியின்றி மற்ற பாகங்கள் திருடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் கிட்னியை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக நபர்களின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று … Read more

போலீஸை டோரில் தொங்க விட்டு டெம்போவை ஓட்டிய டிரைவர்; நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம் – என்ன நடந்தது?

வாகன சோதனையில் போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலையம். டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு  தக்கலை பழைய பேருந்து நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு சுமார் 10.30 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கூண்டு கட்டிய டெம்போவை காவலர் பெல்ஜின் ஜோஸ் (வயது 32) கைகாட்டி நிறுத்தினார். டெம்போ நின்றதும் வாகனத்தை சோதனையிட முயன்றுள்ளார். போக்குவரத்து காவலர் சோதனையிடும் … Read more

தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

டெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்  என பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தம் மற்றும் எதிர்க்கட்சிகிளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து இந்திய தேர்தல் ஆணையர்கள் பதில் அளித்துள்ளனர். ஏற்கனவே வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்திக்கு CEC ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் அல்லது கருத்துக்களை திரும்பப் பெறவும் என கூறிய நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், வாக்குதிருட்டு என  எதிர்க்கட்சிகள் பொய்களை கூறி … Read more

Gold Rate: குறைந்து வரும் தங்கம் விலை; இன்னும் சரியுமா? ஏன் சரிகிறது?

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து, தங்கம் விலை குறைந்துகொண்டு வருகிறது. சென்னையில் தற்போது தங்கம் விலை கிராமுக்கு ரூ.9,275 எனவும், பவுனுக்கு ரூ.74,200 எனவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை ரூ.127 ஆகும். சர்வதேச அளவில், தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 3,335.50 டாலர்களுக்கும், வெள்ளி 38 டாலர்களுக்கும் விற்பனை ஆகிறது. இந்த ஆண்டில் பல முறை புதுப்புது உச்சங்களைப் பெற்ற தங்கமும், வெள்ளியும் இப்போது ஓரளவு நிலையான விலையிலும், குறைந்த விலையிலும் விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தை நிபுணர் … Read more

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை;’ திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த  உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சராக இருந்து வரும்,  ஐ.பெரியசாமி மீது, கடந்த  அதிமுக ஆட்சியில் 2012ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. … Read more

தொழில்நுட்ப கோளாறு; கொச்சி-டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் புறப்பாடு ரத்து

கொச்சி, கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏ.ஐ.504 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை டெல்லி நோக்கி புறப்பட தயாராக இருந்தது. விமானம் மேலே எழும்ப தயாரானபோது, அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், விமானத்தின் புறப்பாட்டுக்கான நேரம் மாற்றப்பட்டது. விமானத்தில் உள்ள கோளாறை சரிசெய்வதற்காக அது தனியான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து, வேறு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, திங்கட்கிழமை … Read more

CP Radhakrishnan: வாஜ்பாயின் சிஷ்யர்; மோடியின் நண்பர்; குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரின் பின்னணி

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சி.பி.ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட மற்றும் அரசியல் … Read more