தன்மீது நீதிமன்றம் தெரிவித்த கடுமையான உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை நீக்க கோரிய செந்தில் பாலாஜி வழக்கு டிஸ்மிஸ்!

டெல்லி: ஊழல் வழக்கில் தன்மீது உச்சநீதிமன்றம்  கூறிய கடுமையான கருத்துகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  இது தவறான எண்ணம் என்று கூறி மனுவை டிஸ்மிஸ் செய்ததுடன், செந்தில்பாலாஜி மீதான வழக்குகளை ஏன் டெல்லிக்கு மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பினர். தனக்கு எதிரான வழக்கில்,  உச்சநீதிமன்றம் தெரிவித்த சில கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதில் நீதிபதிகள் … Read more

கமல்: "அவரின் பேச்சு உங்களைப்போன்ற என்டர்டெய்னர்களுக்குப் புரியாது" – பாஜக அண்ணாமலைக்கு மநீம கண்டனம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பாளரும் மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்டன அறிக்கை இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப்பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளைத் தரம் பார்க்காமல் எல்லோர்மீதும் கொட்டுவதும் வழக்கமாகக் கொண்ட, பாஜக-வினாலேயே புறக்கணிக்கப்பட்ட மாஜி அண்ணாமலை, இன்று எங்கள் தலைவரைப்பற்றி, ‘ஒரு ராஜ்யசபா சீட்டிற்காக … Read more

கரூர் கூட்ட நெரிசலில் 41பேர் பலி: தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி   உச்ச நீதிமன்றத்தில் தவெக  சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 … Read more

Dude: “அந்தப் பாடலைத்தான் என் Ex Girl Friendக்கு முதலில் பாடிக் காட்டினேன்" – பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்’ திரைப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. `லவ் டுடே’, `டிராகன்’ என இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் திரைக்கு வருவதால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். Dude – Pradeep Ranganathan சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் `ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில் அனிருத் இசையமைத்த `எனக்கென யாருமில்லையே’ … Read more

உற்பத்தித் துறையில் ‘லீடர்’ ஆக மாறி வருகிறது தமிழ்நாடு! விண்வெளி பாதுகாப்பு தொழில் கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: உற்பத்தித் துறையில் லீடர் ஆக தமிழ்நாடு மாறி வருகிறது சென்னையில் இன்று நடைபெற்று  விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில், வான்வெளி மற்றும் ராணுவ துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழக அரசின், ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னையில் வரும், 7ம் தேதி முதல், 9ம் தேதி … Read more

பீகார் சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் இழுபறி; முட்டி மோதும் கட்சிகள்; என்ன நடக்கிறது?

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால் இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கவும், பெண் வாக்காளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஆளும் பா.ஜ.க கூட்டணி பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைத்து இருக்கிறது. இதனால் பெண்களின் வாக்கை வைத்து வெற்றி பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க கூட்டணி நம்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகள் தங்களது … Read more

விரைவில் சென்னை ஒன் செயலியில் மாநகர பேருந்து மாதாந்திர பஸ் பாஸ் பெறும் வசதி! அரசு அறிவிப்பு…

சென்னை; தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் சென்னை ஒன் செயலில், சென்னை மாநகர பேருந்துக்கான  மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இதன்மூலம் மாதாந்திர பயண அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில்  ‘சென்னை ஒன்’ செயலி உருவாக்கப்பட்ட கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் Chennai One மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

Nobel Prize: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 3 அமெரிக்கர்கள்; என்ன கண்டுபிடிப்பு தெரியுமா?

இயற்பியல் துறையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகிய மூன்று அறிவியலாளர்கள் வென்றுள்ளனர். மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயக்கவியல் குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு “இந்தக் கண்டுபிடிப்பு குவாண்டம் கிரிப்டோகிராஃபி, குவாண்டம் கணினிகள் மற்றும் குவாண்டம் சென்சார்கள் உள்ளிட்ட குவாண்டம் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும்” என விருதை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது. இயற்பியலுக்காக விருது … Read more

வரும் 9ந்தேதி திறக்கப்பட உள்ள கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘ஜி.டி.நாயுடு’ பெயர் சூட்டி மகிழ்கிறேன்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை : வரும் 9ந்தேதி திறக்கப்பட உள்ள கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை உயர்மட்ட … Read more

“மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? இங்கே வாருங்கள்! வருடத்திற்கு 5 ரூபாய் தான்!''

சூழலே சிவப்பை பூசியவாறு இருக்க, மாலை சூரியன் மெல்ல மறையத் தொடங்குகிறது, கண்ணிற்கு எட்டும் தூரம் வரை வயல்வெளி ! தென்றலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருக்கின்றன செடிகொடிகள்! நெடுந்தூரத்தில் உள்ள ஆலமரத்தை நோக்கி, கிளிகள் சிறகடிக்க தொடங்கிவிட்டன. இவையாவையும் இரசித்தவாறு மரத்தில், அம்மா சேலையால் ஆன ஊஞ்சலில் நீங்களும் உங்கள் தோழனும் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதோ இந்த சிறிய பத்தியை படித்தவுடனே, நீங்கள் உங்கள் சிறு வயதிற்கே சென்றிருக்கலாம்! உங்களுடைய வயல்வெளிக்கு அருகே, உங்கள் தோழனுடன் ஊஞ்சல் … Read more