பீகார் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்ட விவகாரம்; தேர்தல் ஆணையம் பதில் மனு

புதுடெல்லி, பீகாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ந்தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்து விட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர் அல்லது முகவரியில் காணவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்து … Read more

“மாலை 6 மணிக்கு மேல் தனியார் அருவியாக மாறும் பழைய குற்றாலம்'' – விவசாய சங்கம் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியானது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், அருவி அருகே உள்ள பகுதிகள் ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் இருந்தது. மேலும் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற குழப்பம் நிலவுவதாக தமிழ்நாடு உறுதிமொழி குழு ஆய்வின்போது தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சிறுவன் உயிரிழந்ததை அடுத்து வனத்துறை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. … Read more

நாளை செண்டிரல் – சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் 19 மின்சார ரயில்கள் சேவை ரத்து!

சென்னை: சென்னை செண்டிரல் – சூலூர்பேட்டை இடையே இயக்கப்பட்டு வரும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை, 11ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்றும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது அதன்படி சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் 11ஆம் தேதி காலை 10:30, 11:35 மணிக்கு கும்மிடிப்பூண்டி … Read more

ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார்? கபில் சிபல் கேள்வி

புதுடெல்லி, துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களைக் காட்டி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்திருந்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தன்கர் திடீரென ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பதவியை ராஜினாமா செய்த பின்னர் தன்கர் குறித்த எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில், ஜெகதீப் தன்கர் எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை என மாநிலங்களவை எம்.பி கபில் … Read more

புதுச்சேரி: “ரெஸ்டோ பாரில் இளைஞர் உயிரிழக்க காரணம் போலீஸின் மாமூல்தான்'' – அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியர் ஒருவரால் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன், “புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ரெஸ்ட்டோ பாரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். புதுச்சேரி ரெஸ்ட்டோ பார்களால் சட்டம் … Read more

நாளை முதல் சென்னையில் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழகத்​தில் முதன்​முறை​யாக நாளை முதல் சென்னையில் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் ரூ.208 கோடி மதிப்​பில் 120 புதிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்​தார். அப்போது,  பேருந்​துகளை மின்​னேற்​றம் செய்​வதற்​கான கட்​டு​மானப் பணி​கள், பராமரிப்​புக் கூடம் உள்​ளிட்ட வசதி​களு​டன் ரூ.47.50 கோடி​யில் மேம்​படுத்​தப்​பட்ட வியாசர்​பாடி மின்​சா​ரப் பேருந்து பணிமனையை​யும் அவர் திறந்து வைத்​தார். இதைத் தொடர்ந்​து, பெரும்​பாக்​கம் … Read more

பெங்களூரு; 3 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரு, பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் இன்று காலை வந்தடைந்த நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்த அவர், 3 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். பெங்களூரு- பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) – புனே ஆகிய வழித்தடங்களில் இந்த ரெயில்கள் இயக்கப்படும் இதேபோல் ஓட்டுனர் இல்லாத … Read more

`கடிதங்கள் எழுதிய அந்த நாள்கள் இனிய நினைவுகளால் நிரம்பியவை' – Post Box குறித்த நெகிழ்ச்சி பகிர்வுகள்

`தபால் பெட்டி சேவை நிறைவு’ 2025 ஜூலை மாதம், இந்திய தபால் துறையின் முக்கியமான அறிவிப்பொன்று செய்திகள் வாயிலாக பரவியது. “மிக விரைவில், பெரும்பாலான தபால் பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கப்படவுள்ளன; தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாததால் அவை இனி பயன்படுத்தப்பட மாட்டாது” என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, பலர் மனதில் ஆழமான நினைவுகளையும், ஏக்கங்களையும் கிளப்பியது. ஒரு காலத்தில் இந்த தபால் பெட்டிகள் மூலம் காதலும், குடும்பமும், உறவுகளும் இணையப்பட்டிருந்தன. இந்த கட்டுரையில், தங்கள் … Read more

தமிழ்நாட்டில் 22 கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 334 அரசியல் கட்சிகள் நீக்கம்..!

டெல்லி: நாடு முழுவதும் முழுமையான  அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 22 அரசியல் கட்சிகளும் அடங்கி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகள் தேர்தல் களத்தில் பங்கு பெறாத, மற்றும் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் போது வழங்கிய அலுவகத்தில் இயங்காத அரசியல் கட்சியை அடையாளம் கண்டு அதன் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,  தேர்தலில் … Read more

காஷ்மீரில் 10-வது நாளாக தேடுதல் வேட்டை; பயங்கரவாதி பலி

ஜம்மு, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகால் குல்சன் வன பகுதிகளில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த புலனாய்வு தகவலை தொடர்ந்து அவர்களை தேடும் தீவிர பணியில் ராணுவம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஆபரேஷன் அகால் என்ற பெயரிலான இந்த ராணுவ நடவடிக்கை பணியானது, கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது. அப்போது, ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். சமீப ஆண்டுகளில் மிக நீண்டகால ராணுவ தேடுதல் நடவடிக்கையாக … Read more