நேற்று பதவி ஏற்ற மத்திய அமைச்சர்கள் பட்டியல்

டெல்லி நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைசர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றதால் நேற்று டெல்லியில் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். நேற்று பதவி ஏற்றவர்கள் விவரம் வருமாறு : பிரதமர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு … Read more

மோடியின் பதவியேற்பு விழா: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு

புதுடெல்லி, ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற்றது. தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் நாட்டின் 3-வது பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவின் அழைப்பினை ஏற்று உலக தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். எனினும், ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை அழைக்கவில்லை என கூறப்பட்டது. எனினும், காங்கிரஸ் தலைவர் … Read more

முதல் முறையாக மத்திய மந்திரி ஆனார் குமாரசாமி

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து புதிய அரசு இன்று பதவியேற்றது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் மோடி. அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து புதிய மந்திரிகள் பதவியேற்றனர். அவர்களில், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி.குமாரசாமியும் ஒருவர். ஒரு … Read more

இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 09.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி … Read more

நாளை முதல் அரசு, கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வு

சென்னை நாளை முதல் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிரது. தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு பி.எஸ்.சி. பி.காம். பி.ஏ என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. கடந்த மாதம் 6 ஆம் தேதி இதற்கான, 2024-25 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கி 24 ஆம் தேதி … Read more

ஒடிசாவில் பேசு பொருளான வி கே பாண்டியன் அரசியலில் இருந்த் விலகல்

புவனேஸ்வர் ஒடிசாவில் நிழல் முதல்வர் எனக் கூறப்பட்ட வி கே பாண்டியன் அரசியலில் இருந்து விலக உள்ளார். கடந்த 4 ஆம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் பதவி ஏற்க நரேந்திர மோடி  உரிமை கோரியதை அடுத்து அவர் இன்று பதவியேற்பை நடத்தி வைப்பதாக … Read more

Jammu-Kashmir: பக்தர்கள் சென்ற பேருந்துமீது தீவிரவாதிகள் தாக்குதல் – 10 பேர் பலி; 33 பேர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள ஷிவ்கோரிக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று மாலை 6.10 மணியளவில் ரஜோரி மாவட்டத்தின் எல்லையான ரியாசி மாவட்டத்தின் பூனி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அதை நோக்கி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். அதனால் அந்தப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும் எஸ்.எஸ்.பி ரியாசி, மோஹிதா சர்மா தெரிவித்திருக்கிறார். பேருந்து மீது தாக்குதல் இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறை தரப்பில், “ஓட்டுநர் … Read more

இன்னும் 4 நாட்களில் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ள தொகுதி அறிவிப்பு

டெல்லி ராகுல் காந்தி எந்த தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வார் என்பது குறித்து இன்னும் 4 நாட்களில் காங்கிரஸ் அறிவிக்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி … Read more