ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடியை இறக்கிய அமெரிக்கா.. பயம் காட்டும் புதிய வகை போர் விமானம்!

சனா: செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு எதிராக அமெரிக்கா B-2 ஸ்டெல்த் பாம்பர்களை களமிறக்கியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில், ஹமாஸை அழிப்பதாக Source Link

அசாமில் தடம் புரண்ட பயணிகள் ரயிலில் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விவரங்களை அறிய உதவி எண்கள் அறிவிப்பு…

அஸ்ஸாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் இன்று (அக். 17) மாலை 4 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அகர்தலா – லோக்மான்யா திலக் ஜங்ஷன் இடையே இயக்கப்படும் இந்த பயணிகள் விரைவு ரயில் திபலாங் ரயில் நிலையம் அருகே சென்ற போது ரயில் என்ஜின் உள்பட 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என வடகிழக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. லூம்திங் மண்டலத்துக்குட்பட்ட … Read more

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி! போரை முடிவுக்கு கொண்டுவருகிறார் நெதன்யாகு?

காசா: பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் கடந்த ஓராண்டாக தீவிர சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சண்டையில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இஸ்ரேல் உறுதி செய்து வருகிறது. ஏற்கெனவே ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் போட்டு தள்ளியது. இந்நிலையில், Source Link

நேபாளத்தில் மலையேறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 சிகரங்களில் ஏறுவதற்கு 870 பேருக்கு அனுமதி…

இலையுதிர் காலத்தில் மலை ஏறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 மலைகளை ஏறுவதற்கு 870 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 70 நாடுகளைச் சேர்ந்த 668 ஆண்கள் மற்றும் 202 பெண்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகின் ஏழாவது மற்றும் எட்டாவது உயரமான மலை சிகரங்களான தௌலகிரி (8,167 மீ) மற்றும் மவுண்ட் மனாஸ்லு (8,163 மீ) உட்பட 37 மலை சிகரங்களில் ஏறுவதற்கு புதன்கிழமையன்று சுற்றுலாத் துறை அனுமதித்தது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 73 … Read more

புதிய பஜாஜ் பல்சர் N125 பைக் அறிமுகமானது

பஜாஜின் பிரபலமான பல்சர் பைக் வரிசையில் மூன்றாவது 125சிசி மாடலை பல்சர் N125 என்ற பெயரில் ரூபாய் 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். புதிய மாடல் பல்சர் என்125 என அழைக்கப்பட்டாலும் முந்தைய பல்சரின் N பைக்குகளான என்150,என்160 மற்றும் என்250 போல அல்லாமல் மாறுதலான டிசைனை பெற்றிருக்கின்றது. ஏற்கனவே பல்சர் பிராண்டில் 125சிசி சந்தையில் கிளாசிக் ஸ்டைல் பல்சர் 125 மற்றும் பல்சர் NS125 என இரு மாடல்கள் உள்ளது. Bajaj Pulsar … Read more

“என் கணவரின் கைகோர்த்து என்னைத் தகனம் செய்யுங்கள்'' – கணவர் இறந்த மறுநாளே தற்கொலை செய்த மனைவி!

டெல்லியில், இந்திய ராணுவப் படையில் வேலை பார்க்கும் பெண் அதிகாரியொருவர், விமானப் படையில் வேலைபார்க்கும் தனது கணவர் உயிரிழந்த செய்தியறிந்து தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, விமானப் படை லெப்டினன்ட் அதிகாரி தீன்தயாள் தீப் மற்றும் இவரின் மனைவியான ராணுவ அதிகாரி ரேணு தன்வார் ஆகியோர் 2022-ல் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதில், பீகாரைச் சேர்ந்த தீன்தயாள் தீப் ஆக்ராவிலுள்ள விமானப்படை நிலையத்தில் பணியமர்த்தப்பட்டதையடுத்து, டெல்லி கண்டோன்மென்ட்டில் … Read more

புனே ROC அதிகாரி மீது ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு…

புனேவைச் சேர்ந்த ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனியின் மூத்த அதிகாரி, ரூ. 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். நிறுவனங்களின் உதவிப் பதிவாளரும், புனே ஆர்ஓசி அலுவலக இன்ஸ்பெக்டருமான அஜய் பவார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று (அக். 16) எஃப்ஐஆர் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் அவரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிர்லா கோல்டு அண்ட் பிரீசியஸ் மெட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் லஞ்சத்தின் … Read more

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து களமிறங்கும் சத்யன் மொகேரி.. அறிவித்தது சிபிஐ!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சத்யன் மோக்கேரி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 13 ஆம் தேதி 43 தொகுதிகளிலும் Source Link