Sugarcane Juice: வாரம் 2 டம்ளர்; உங்களை ஹெல்தியாக்கும் இயற்கை டானிக்..! Health Tips
எல்லாக் காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கிய பானம் கரும்புச்சாறுதான். கரும்புச்சாறில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துகள் அடங்கியிருக்கின்றன என்கிற சித்த மருத்துவர் வேலாயுதம், அதன் மருத்துவ பலன்களை சொல்கிறார். உடலில் ஏற்படும் நீர் வறட்சி, நீரிழப்பு, உடல் சூட்டைத் தவிர்க்கவும் இது உதவும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும். இது, உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்துவதால், தொற்றுநோய்கள் நெருங்காது. கோடைக்காலத்தில் ஏற்படும் சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். … Read more