'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' – காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்!
தூய்மைப் பணியாளர் ஜெனோவானின் கையில் இரத்த அழுத்ததை அளப்பதற்கான பட்டையை மாட்டுகிறார் மருத்துவர். அவருக்கு ஜெனோவா கொஞ்சம் பதட்டமாக இருப்பதைப் போல தோன்றுகிறது. ‘டென்ஷன் ஆகாதீங்கம்மா. ஒன்னும் இல்லை..’ என்கிறார் மருத்துவர். ஜெனோவா ‘நாலு மாசமா பொழைப்பு இல்லாம ரோட்டுல நிக்குறோம். குடும்பமே பட்டினில கிடக்கு. அதைவிட இதெல்லாம் ஒரு டென்ஷனா மேடம்…’ என்கிறார் ஜெனோவா. அவரின் குரலில் அத்தனை வேதனை. எவ்வளவு போராடியும் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி மடுக்கப்படவில்லையே என்கிற விரக்தி. அம்பத்தூரில் உழைப்போர் உரிமை … Read more