வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் நிலைநிறுத்தம்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்க செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில்  நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான  இஸ்ரோ தெரிவித்து உள்ளது.  அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில் ‘புளூபேர்ட்–6’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. … Read more

புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சென்னை: சென்னையின் கலாச்சாரச் சின்னமான  விக்டோரியா பொது அரங்கம், தொன்மைமாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  (23.12.2025) பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், சென்னையின் கலாச்சாரச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம் 32.62 கோடி ரூபாய் செலவில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு திறந்து வைத்தார். சென்னையின் கலாச்சாரச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம் விக்டோரியா பொது அரங்கம், சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் பிரிட்டிஷ் … Read more

Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&A

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.200-ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது என்று பார்த்தால், இப்போது அந்த உச்சங்களையும் தாண்டி புதிய உச்சத்தில் விற்பனை ஆகி வருகின்றன. நேற்று சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.1,02,160 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.234 ஆகவும் விற்பனை ஆனது. இரண்டுமே புதிய உச்சம் ஆகும். இந்த நேரத்தில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். … Read more

"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" – லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், இந்திய அரசாங்கத்தையும் சட்டத்தையும் அவர்கள் இருவரும் பகிரங்கமாகக் கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. லண்டனில் இருந்து லலித் மோடி வெளியிட்ட அந்த வீடியோவில், “நாங்கள் இருவரும் தப்பியோடியவர்கள், இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தப்பியோடியவர்கள்” என்று தன்னை மல்லையாவோடு சேர்த்து கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். … Read more

வெளிநாட்டவர்களுக்காக மதுக்கொள்கையை தளர்த்திய குஜராத் அரசு

காந்திநகர் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச நிதி சேவை மையமாகவும், இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாகவும் கருதப்படும் டெக் சிட்டியில் மட்டும் கடந்த 2023-ம் ஆண்டு முதல் மது விற்பனையை மாநில அரசு அங்கீகரித்தது. அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் அமைந்துள்ள டெக் சிட்டியில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரண்டுகள் மற்றும் கிளப்புகளில் அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட பகுதியில் … Read more

மத்திய பிரதேசம்: 42 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்

போபால், பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடப்பாண்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்றன. இதேபோன்று, நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய பிரதேசத்தில், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர். … Read more

உன்னாவ் பலாத்கார வழக்கு; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் தண்டனையை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட்டு

லக்னோ, உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ‘தான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்’ என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், அந்த இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி. போலீசாரால் கடந்த 2-4-2018 … Read more

உன்னுடன் வந்து விடுகிறேன்… முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

பாராபங்கி, உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (வயது 27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை 10 மணியாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. உள்ளே மொபைல் போனின் அழைப்பு மணி தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது. இதனை கவனித்த ஊழியர் கதவை பல முறை தட்டியும், அவரை அழைத்தும் இருக்கிறார். ஆனால், பதில் எதுவும் வரவில்லை. … Read more