வீட்டில் பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு; வாளியில் ஆண் குழந்தை சடலம்… கொலையா என போலீஸ் விசாரணை!

பட்டுக்கோட்டையில் பெண் ஒருவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் ரத்தப்போக்கு அதிகமாகியிருக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து வாளியில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை போலீஸார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் செந்திலுடன் வசந்தி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி வசந்தி வயது 38. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் … Read more

நம் ரத்தத்தில் கலந்துள்ள இந்தியா என்னும் பெயரை மாற்றக்கூடாது : பிரேமலதா விஜயகாந்த்

மயிலாடுதுறை நம் ரத்தத்தில் கலந்துள்ள இந்தியா என்னும் வார்த்தையை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் குடியரசுத் தலைவர்,, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டது. இன்று மயிலாடுதுறையில் பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து செய்தியாளர்களிடம், “நமது இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது … Read more

ஜோ பைடனின் கான்வாய் வாகன டிரைவரால் பரபரப்பு| Joe Bidens convoy chauffeured by the driver

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கான்வாய் வாகன டிரைவர் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து கான்வாயில் இருந்து அந்த வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது. புதுடில்லியில் 10 மற்றும் 11ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். உலக தலைவர்களின் வருகையையொட்டி அவர்களின் பாதுகாப்பை கருதி டில்லி நகரங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதே … Read more

நெல்லை: குடிநீர் கிடைப்பதில் சிக்கல்; காலிக் குடங்களை மரத்தில் தொங்கவிட்ட கிராம மக்கள்!

நெல்லை மாவட்டம், பருத்திப்பாடு பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஆணைபுரம் கிராமம். விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், 500-க்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமத்துக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, 15 நாள்கள் முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். எப்போதாவது கிடைக்கும் குடிநீரும் போதுமான அளவில் கிடைப்பதில்லை என ஆணைகுளம் கிராம மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். குடிநீருக்காக பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை … Read more

பாஜக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசு மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே.  மத்திய அரசு பல முறை திட்டங்கள் தீட்டி விட்டு அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். இன்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில், ”ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை … Read more

சந்திரபாபு நாயுடு கைதால் கொந்தளிப்பு.. பந்திற்கு அழைப்பு.. ஆந்திர – தமிழக எல்லையில் ஹை டென்ஷன்

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நாளை முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், ஆந்திராவில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. போலீசாரும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி Source Link

“சனாதனம் குறித்து 200 ஆண்டுகளாகப் பேசுகிறோம்… இனியும் பேசுவோம்!” – அமைச்சர் உதயநிதி

கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரனின் இல்லத் திருமண விழா ஒரு சுயமரியாதை திருமணமாகும். ஒரு மாநாட்டைப்போல திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி, சசிகலா அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி என பல அணிகள் இருக்கின்றன. அதுபோல் குடும்ப வாழ்க்கையில் … Read more

பிரதமர் மோடிக்கு ஜி 20 வெற்றிக்காக ஷாருக்கான் வாழ்த்து

டில்லி நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு இந்தியாவில் ஜி 20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இந்த ஆண்டு தலைமையை இந்தியா ஏற்று நடத்தியது. நேற்றும், இன்றும் டில்லியின் பாரத் மண்டபத்தில் உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளில் சர்வதேச விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கான தீர்மானம் நிறைவேறி வரலாற்று ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பிறகு வந்திருந்த விருந்தினர்களுக்குப் பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் வழங்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று ஜி-20 தலைமைத்துவம் … Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.. ஒரே பதற்றம்.. ஆந்திரா முழுவதும் போலீஸ் குவிப்பு!

அமராவதி: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது வரும் 22 ஆம் தேதி அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து சந்திரபாபு நாயுடு, ராஜ முந்திரி சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் Source Link

திருட முயன்றபோது உடலில் ஏறி இறங்கிய டிராக்டர் – மீண்டும் எழுந்து திருடிச்சென்ற நபர் | Viral Video

கண்காணிப்பு கேமரா வந்த பிறகு, திருட்டு போன்ற குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. திருடர்கள் திருடுவதற்கு வந்து எதுவும் கிடைக்காமல் கோபத்தில் எதையாவது உடைத்து போட்டுவிட்டுச் செல்லும் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்க்கும்போது சிரிப்புதான் வரும். அந்த வகையில் குஜராத் மாநிலம், மொடாசா என்ற இடத்தில் இருக்கும் டிராக்டர் ஷோரூம் ஒன்றுக்கு நேற்று இரவு திருடன் ஒருவன் வந்தான். ஷோரூம் காம்பவுண்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றை திருடன் திருடுவதற்காக ஸ்டார்ட் செய்தான். நீண்டநேரமாக வண்டியை ஸ்டார்ட் செய்ய … Read more