உலக கோப்பை திருவிழா இன்று ஆரம்பம்! | The World Cup festival begins today!

ஆமதாபாத்: உலக கோப்பை தொடர் இன்று(அக்.,5) ஆமதாபாத்தில் ஆரம்பமாகிறது. அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ‘சூப்பர்’ விருந்து காத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 1975 முதல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 13வது சீசன் இன்று இந்தியாவில் துவங்குகிறது. பைனல் நவ.19ல் நடக்க உள்ளது. வீரர்களின் சரவெடி ஆட்டம் காரணமாக தீபாவளி பண்டிகை(நவ.12) முன்னதாகவே வந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள், ‘ரவுண்டு ராபின்’ முறையில் … Read more

நடிகை கார் மோதி இரண்டு பேர் பலி | Two killed in actresss car collision

ரோம்,இத்தாலியில் நடந்த கார் விபத்தில் ஸ்வதேஸ் ஹிந்தி பட நடிகை காயத்ரி ஜோஷியின் கார் மோதியதில் வயதான தம்பதி பலியாகினர். இந்த விபத்தில் காயத்ரியும், அவரின் கணவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆடம்பர கார் கடந்த 2004ல் வெளியான ஸ்வதேஸ் ஹிந்தி படத்தில் நடிகர் ஷாரூக் கான் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜோஷி, 46. ஒரே படத்துடன் சினிமா துறையில் இருந்து விலகிய அவர், கடந்த 2005ல் தொழிலதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்து … Read more

கோவை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு| Denial of bail for Coimbatore blast case convicts

புதுடில்லி, தமிழகத்தின் கோவையில், 58 பேர் உயிரிழக்க காரணமான குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, 16 பேர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவையில், 1998 பிப்., 14 – 17ம் தேதிகளில், 19 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில், 58 பேர் உயிரிழந்தனர்; 250 பேர் காயமடைந்தனர். இதைத் தவிர, 24 இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு, செயலிழக்கம் செய்யப்பட்டன.அல் – உம்மா தலைவர்களான … Read more

தமிழகத்தில் சாதிய  பாகுபாடுகள் அதிகரிப்பு : ஆளுநர் ஆர் என் ரவி

கடலூர் தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். இன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா. .ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.. அவர் தனது உரையில், “தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இங்குச் சாதிய வன்கொடுமைகள் எந்த அளவிற்கு தலைதூக்கிவிட்டது என்றால், வேங்கை வயலில் குடிநீரில் மலத்தைக் கலந்துள்ளார்கள், மேலும்  நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த … Read more

கைதுக்கு பின் சஞ்சய் சிங் வெளியிட்ட வீடியோ| Video released by Sanjay Singh after his arrest

கைதுக்கு முன்பாகவே, ‘வீடியோ’ பதிவு செய்து வைத்து, அதை கைதுக்கு பின் சஞ்சய் சிங் வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எந்த ஆதாரமும் இன்றி அமலாக்கத் துறையினர் என்னைக் கைது செய்துள்ளனர். அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்தியும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல்கள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்புவேன். அரவிந்த் கெஜ்ரிவாலின் வழி வந்த நாங்கள் ஒருபோதும் தலைவணங்கி, பின்வாங்க மாட்டோம். அட்டூழியங்கள் செய்து, மக்களை சிறையில் அடைத்து … Read more

மோசடி வழக்கில் லாலு, மனைவி மற்றும் தேஜஸ்விக்கு ஜாமீன்

டில்லி பீகார் முன்னாள் முதல்வர் லாலு, அவர் மனைவி மற்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மோசடி வழக்கில் ஜாமீன் வ்ழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2009 வரை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்., ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிகக் குறைந்த விலையில் லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு … Read more

தேஜஸ் இலகு ரக விமானம் படையினரிடம் ஒப்படைப்பு| Tejas light aircraft handed over to soldiers

பெங்களூரு :முதல் இலகுரக தேஜஸ் இரட்டை இருக்கை விமானத்தை, ஹெச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனம் முறைப்படி நம் விமானப் படையிடம் நேற்று ஒப்படைத்தது. கர்நாடகாவின் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம், நம் விமானப் படையில் பயன்படுத்தக்கூடிய இரு இருக்கைகள் உடைய, 18 இலகுரக தேஜஸ் விமானங்களை வடிவமைத்து தர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2023 – 24ம் நிதியாண்டிலேயே எட்டு விமானங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதல் இலகுரக தேஜஸ் … Read more

ஆம்  ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கை கைது செய்த அமலாக்கத்துறை

டில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டில்லியில் ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளனர். டில்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குப் பதிவு … Read more