டெல்லி மெட்ரோ ரயிலில் சிறுமி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாக ஒருவர் கைது…

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரக்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டியை அடுத்து விடுமுறை தினமான நேற்று டெல்லி மெட்ரோ ரயிலில் கூட்டம் அலைமோதியது. ரித்தாளா முதல் ஷாஹீத் ஸ்தல் வரை உள்ள ரெட் லைன் வழித்தடத்தில் சென்ற மெட்ரோ ரயிலில் இரவு 8:30 மணி அளவில் கூட்ட நெரிசலில் பயணம் செய்த சிறுமியிடம் ஒருவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு சுயஇன்பத்திலும் ஈடுபட்டுள்ளான். சீலாம்பூர் ரயில்நிலையத்தில் இறங்க … Read more

செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

புதுடெல்லி, செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் தான் முடிந்த நிலையில் தற்போது சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி … Read more

மரக்காணத்தில் மீண்டும் கள்ளச்சாராயம்; 450 லிட்டர் பறிமுதல்; வியாபாரி வீட்டுக்கு சீல்!- நடந்தது என்ன?

மூன்று மாதங்களுக்கு முன்பாக, விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் 8 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 21 உயிர்களை பலிகொண்ட கள்ளச்சாரய சம்பவம், தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அது, மெத்தனால் என்ற கெமிக்கல் கலக்கப்பட்ட விஷச்சாராயம் என்பது ஆய்வில் தெரியவந்திருந்தது. அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், இரண்டு மாவட்டங்களிலும் எஸ்.பி-கள் முதல் ஏட்டுகள் வரை பணி மாறுதல்கள், பணி … Read more

எந்த வேறுபாடும் இல்லாத இந்தியா கூட்டணி கட்சிகள் : சஞ்சய் ராவத்

மும்பை சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இந்தியா கூட்டணிக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை எனக் கூறி உள்ளார். இன்று மும்பை நகரில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமில்லாதது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறி உள்ளது. அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் , ”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையின் கீழ் நாடு பணியாற்ற விரும்புகிறது.  ஆனால் பாஜகவில் பயம் நிலவுகிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 2024 … Read more

உலகிலேயே மிக அழகான கையெழுத்து இதுதான்.. நேபாளத்தையே எழுதி தரலாம்.. மிரள வைத்த இளம் பெண்

காத்மாண்டு: நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கையெழுத்து உலகிலேயே மிக அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த கையெழுத்தை பார்த்தால் இப்படி ஒரு கையெழுத்தை நம்மால் எழுத முடியவில்லையே என்று நிச்சயம் கம்ப்யூட்டரே வெட்கப்படும். அழகான கையெழுத்து உள்ளவர்கள் படிப்பில் பொதுவாக சிறந்து விளங்குவார்கள்.கையெழுத்து போலவே தலையெழுத்தும் சிறப்பாக இருக்கும். பள்ளி தேர்வுகளில் சாதாரண Source Link

பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தின் புதிய இயக்குனராக மீண்டும் தமிழர்| Tamil is back as the new director of Bandipur Tiger Reserve

சாம்ராஜ் நகர்:கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில், பண்டிப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது, நாட்டிலேயே புலிகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. யானைகள் எண்ணிக்கையில் நாட்டில் முதல் இடம் பிடித்துள்ளது. இதன் இயக்குனராக, புதுச்சேரியை சேர்ந்த தமிழ் அதிகாரி ரமேஷ்குமார், 2022ல் பொறுப்பேற்றார். இவரது கடும் உழைப்பு, திட்டமிட்டு செயல்படுதல் காரணமாக, இம்முறையும் புலிகள், யானைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. செயலற்று கிடந்த வன விடுதிகளுக்கு புத்துயிர் வழங்கி, சீரமைத்தார். வனம், வன விலங்குகள் … Read more

ரசாயனம் கலப்பில்லா விநாயகர் சிலை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சென்னை, இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள். பின்னர், 3-ம் நாள் அந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அந்தந்த பகுதியில் உள்ள குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. … Read more

Royal Enfield EV Plans – ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்பொழுது ?

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க டுகாட்டின் ஸ்கிராம்பளர் வடிவமைப்பாளரான மரியோ அல்விசி நியமித்துள்ளதாக ஐஷர் தலைவர் சித்தார்த் லால் தெரிவித்துள்ளார். டுகாட்டி மட்டுமல்லாமல் ஃபியட் அபார்த், ஆல்ஃபா ரோமியோ போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ள  மரியோ அல்விசி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் EV வாகன தயாரிப்பு, பிராண்டிங், சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் தயாரிப்பு மூலோபாயம் ஆகியவற்றின் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். Royal Enfield First Electric bike விற்பனையில் கிடைக்கின்ற பெட்ரோல் என்ஜின் பெற்ற … Read more

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பணத்தைப் பெருக்குவது எப்படி? கோவை வாசிகளுக்கு அரிய வாய்ப்பு

பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியாததாலேயே முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பங்குச் சந்தையில் பல ஆண்டுகள் முதலீடு செய்பவர்களே நஷ்டத்துக்கு ஆளாகும் சூழலும் இருக்கிறதே, நம்மால் மட்டும் லாபம் பார்த்துவிட முடியுமா என்ற அச்சமும் இருக்கிறது. ஏனெனில் பங்குச் சந்தை முதலீடு ரிஸ்க்கானது. பெரும்பாலும் பணம் சார்ந்த விஷயத்தில் மக்கள் உணர்வுப்பூர்வமாகவே முடிவெடுப்பதால் எப்போது சந்தையில் முதலீடு … Read more

கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை : டி கே சிவகுமார் அதிரடி

டில்லி கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை என அம்மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறி உள்ளார். தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்குத் திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன் தினம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது இதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் அவசரமாக டில்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து … Read more