Morbi Bridge Collapse: `ஓராண்டு ஆகிருச்சு; வடுவும் ஆறல… நீதியும் கிடைக்கல!' – குமுறும் மக்கள்

2022 அக்டோபர் 30-ல் குஜராத் மாநிலம், மச் ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில், சுமார் 50 குழந்தைகள் உட்பட, 135 பேர் உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களில் பெரும்பாலனோர் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள். இந்தக் கோர விபத்து நிகழ்ந்து ஓராண்டு முடிந்திருக்கும் நிலையில், இன்னும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமம் அருகே ஒன்று கூடி, இத்தகைய விபத்துக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை … Read more

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்டு பிடிக்கிறது! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி விவகாரத்தில் இதுவரையில் இருந்த எந்த அரசும்  கர்நாடக அரசும், இவ்வுளவு முரண்பிடித்தது இல்லை, ஆனால், தற்போதைய  கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்பிடிக்கிறது என தமிழ்நாடு நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தர மறுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மத்தியஅரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடியது. மத்தியஅரசும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டும் கர்நாடக மாநில அரசு தண்ணீரை திறந்துவிட … Read more

பேச்சுவார்த்தையை விரும்பும் இஸ்ரேல்! கத்தாருக்கு பறந்த மொசாட் முக்கிய புள்ளி! போர் முடிவுக்கு வருமா?

தோஹா: காசா மீது 25வது நாளாக இன்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் தற்போது, ஹமாஸ் வசம் இருக்கும் பிணை கைதிகளை மீட்க இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டின் இயக்குநர் கத்தாருக்கு சென்றிருக்கிறார். தற்போது வரை ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கத்தார்தான் பேச்சுவார்த்தை செய்து வருகிறது. இஸ்ரேலுகும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது Source Link

Royal Enfield Himalayan 450 – புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் முக்கிய விபரங்கள்

வரும் நவம்பர் 7 ஆம் தேதி EICMA 2023 மோட்டடார் ஷோவில் அட்வென்ச்சர் டூரிங் ஸ்டைலை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கினை வெளியிட உள்ள நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட 452cc லிக்யூடு கூல்டு என்ஜினை பெறுகின்றது. செர்பா 450 என்ற ஸ்கிராம்பளர் பைக்கினை கொண்டு வரவுள்ள நிலையில் அந்த பெயருடன் பயன்படுத்தி விற்பனையில் உள்ள ஹிமாலயன் LS 411 என்ஜின் டார்க்கினை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.  New Royal Enfield Himalayan 450 புதிய ராயல் … Read more

AFG vs SL: "இலங்கை ஆல்-அவுட்; அசால்ட்டான சேஸிங்" – இது ஆப்கானின் 2.0 வெர்ஷன்!

புனேவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மோதின. இதில் இலங்கை அணியை 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சேஸிங் செய்து அற்புதமான வெற்றி பெற்றுள்ளது, ஆப்கானிஸ்தான் அணி. முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பௌலிங்கைத் தேர்வு செய்திருந்தது. இந்த ஆட்டம் முழுவதுவே ஆப்கானிஸ்தான் அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த அளவிற்கு ஒவ்வொரு செயலிலும் அத்தனை திட்டமிடலுடன் ஆடியிருந்தனர். ஆப்கானின் டாஸ் தேர்வைத் தொடர்ந்து, பேட்டிங்கில் இலங்கை அணியின் … Read more

பல்லாவரம் ரேடியல் சாலையில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Capitaland – Radial IT Park சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை பல்லாவரம் ரேடியல் சாலையில்  திறந்து வைத்தார். சுமார், 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் கேபிடல் லேண்ட் டெக்னோ பார்க் என்ற தனியார்  தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி … Read more

எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு கோஷம்- ’தாத்தா’ முத்துராமலிங்க தேவரை அவமதிப்பதற்கு சமம்- சீமான் கண்டனம்

பசும்பொன்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முழக்கங்களை எழுப்பியது அருவறுக்கத்தக்கது,அநாகரீகமானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் Source Link

சேலம்: காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பள்ளிக்கூடத்தின் சுவரில் மனிதமலம் பூசிய மர்ம நபர்கள்

சேலம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே காவிரிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 1958-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 170 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ய்ஜிங்கள்கிழமை விடுமுறை தினம் முடிந்து, வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பள்ளியின் … Read more