விண்ணில் பாய தயாராகும் சந்திராயன்-3.. 26 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்குகிறது

India oi-Mani Singh S ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 வினாடிகளில் சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. இதற்காக இன்று பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ, நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை கடந்த 2019 … Read more

இமாசலபிரதேசத்தில் ஆற்றில் பாய்ந்த காரை வெள்ளம் இழுத்து சென்றது: 4 பேரின் கதி என்ன?

சிம்லா, இமாசலபிரதேசத்தின் சிம்லா மாவட்டம் லட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ் பாண்ட்லா (வயது 33). இவர் நோய்வாய்ப்பட்ட தனது அம்மா சந்தலா தேவியை (55) ராம்பூர் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்ப்பதற்காக தனது காரில் நேற்று முன்தினம் இரவில் அழைத்துச் சென்றார். காரில் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேர் இருந்தனர். இரவு 10.45 மணி அளவில் கார், தேசிய நெடுஞ்சாலையில் நூக்லி பகுதி அருகே வந்தபோது, மழையால் சாலை சேதம் அடைந்திருந்ததால், நிலைதடுமாறி ஓடிய கார், … Read more

கரூர்: அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலப்பு?! – அதிர்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள்

கரூர் மவட்டம், கடவூர் அருகே இருக்கிறது வீரணம்பட்டி. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 168 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், மாணவர்களுக்காக பள்ளி வளாகத்திற்குள் மூன்று சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு, அவற்றில் நீர் சேமிக்கப்பட்டு, அதன்மூலமாக மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள், பள்ளி இடைவேளையில் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் தொட்டி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த … Read more

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங். தொடர்ந்து வெற்றி முகம்

கொல்கத்தா, திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே இந்த உள்ளாட்சி தேர்தல் களம் பெரும் வன்முறை சம்பவங்களை சந்தித்தது. இதில் உச்சபட்சமாக வாக்குப்பதிவு நாளான கடந்த 8-ந்தேதி நடந்த வன்முறையில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. … Read more

டாஸ்மாக் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளார். டாஸ்மாக் மதுக்கடைகள் காலையிலேயே திறக்கப்படுமா என்று சர்ச்சை எழுந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என்று அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார். கடைகள் வழக்கம் போல நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம், ”அரசிடம் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்ற எந்த திட்டமும் இல்லை.  அரசு 90 மிலி … Read more

டெலிகிராம் நண்பர்மீது காதல்; 2-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி – போலீஸ் விசாரணை

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த 24 வயதுப் பெண் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பலத்தக் காயமடைந்த அந்தப் பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், காவல்துறைக்கும் தகவல் தரப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர், சிகிச்சை பெற்றுவரும் பெண்ணிடம் விசாரிக்க முடியாததால், பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்தனர். காதல் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறையினர், “நொய்டாவைச் சேர்ந்த அந்த இளம்பெண், எம்.பி.ஏ … Read more

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் ஜூலை 16 நடை திறப்பு

சபரிமலை சபரிமலைக் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது/   ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும்.  மேலும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம்  பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும். வரும் 16 ஆம் தேதி ஆடி … Read more