பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்!

India oi-Mathivanan Maran பனாஜி: பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேன்டும் என்று கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வென்று கணக்கை தொடங்கியது. தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சியினரால் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது என்பது போலீஸ் பதிந்த வழக்கு. … Read more

வெளி மாநிலங்களுக்கு செல்ல முன்னாள் அமைச்சருக்கு தடை| Ex-minister barred from visiting foreign states

புதுடில்லி : மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமுன்னாள் அமைச்சர்ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்ல உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தின் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்தது. இதற்கு எதிராக அவர் உச்ச … Read more

2023 Citroen C3 – டாப் வேரியண்ட் சிட்ரோன் சி3 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற C3 எஸ்யூவி காரில் கூடுதல் வசதிகளை பெற்ற ஷைன் டாப் வேரியண்ட்டை விற்பனைக்கு சிட்ரோன் கொண்டு வந்துள்ளது. C3 எஸ்யூவி காரின் விலை ₹ 6.16 லட்சம் முதல் ₹ 8.25 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Common Modular Platform (CMP) என்ற பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள C3 எஸ்யூவி காரின் குதிரைத்திறன் 100 bhp மற்றும் 160 Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் PURETECH … Read more

Tamil News Live Today: திமுக ஃபைல்ஸ்: இன்று காலை 10.15 மணிக்கு திமுகவினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை!

இன்றுதிமுகவினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை! தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என முன்னரே அறிவித்திருந்தார். இந்த நிலையில், `தி.மு.க-வின் ஊழல் பட்டியல் இன்று காலை 10:15 மணிக்கு வெளியிடப்படும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். DMK Files April 14th, 2023 – 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0 — K.Annamalai (@annamalai_k) April 13, 2023 … Read more

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் அமன் செஹ்ராவத்

நியுடெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவில் கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மான்பெகோவை வீழ்த்தி அமன் செஹ்ராவத் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவில் கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மான்பெகோவை வீழ்த்தி அமன் செஹ்ராவத் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். டெல்லியின் புகழ்பெற்ற சத்ரசல் ஸ்டேடியத்தில் பயிற்சி பெறும் அமான், 2023 சீசனில் தனது … Read more

சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என பழந்தமிழர் எப்போதாவது கொண்டாடிய வரலாறு இருக்கிறதா?

Tamilnadu oi-Mathivanan Maran ஏப்ரல் 14- சித்திரை 1-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதேநேரத்தில் தனித் தமிழ் இயக்கத்தாரும் திராவிட இயக்கத்தாரும் தை 1-ந் தேதி ஜனவரி 14-ந் தேதிதான் தமிழர் புத்தாண்டு என கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். தமிழர் புத்தாண்டு சித்திரை 1 அல்லது தை 1 என்பது தொடர்பான சர்ச்சை பெருங்காலமாகவே தொடரத்தான் செய்கிறது. சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், சுமேரியர்கள் பிரமிடுகளைக் கட்டிக் … Read more

மியான்மரில் அமைதி திரும்ப இந்தியா வேண்டுகோள்| India appeals for peace in Myanmar

புதுடில்லி : ”மியான்மரில் அமைதி ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகம் மீண்டும் திரும்ப வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,” என நம் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். தென் கிழக்கு ஆசியநாடான மியான்மரில் 2021ல்ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின்ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. அப்போதிருந்தே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மீதுமியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் சகாயிங் பிராந்தியத்தின் கன்பாலு நகரில் … Read more

ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் அபகரிப்பு? – நயினார் நாகேந்திரன் தரப்பு தன்னிலை விளக்கம்!

நெல்லை சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க உறுப்பினரான நயினார் நாகேந்திரன் மீது அறப்போர் இயக்கம் நில அபகரிப்பு புகாரை தெரிவித்துள்ளது. அதில், “மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ளது. அதில், 1.3 ஏக்கர் நிலத்தை இளையராஜா என்பவரிடம் இருந்து வாங்குவதற்காக நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி ஆகியோர் கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளனர். அறப்போர் இயக்கம்சென்னை மொட்ரோ ரயில் நிறுவனம் அந்த நிலத்தை கையகப்படுத்தி இருப்பதைக் கூடக் கவனத்தில் … Read more

ஏப்ரல் 13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 328-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 328-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு 2023: இரவு பிறக்கும் சோபகிருது.. இந்த ஒரு உணவு போதும் படையலே தடபுடலாக இருக்கும்!

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன? தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. சுபகிருது ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்குகிறது. ஆங்கில புத்தாண்டான … Read more