Usman Ghani: "ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்!"- கிரிக்கெட்டிலிருந்து விலகிய உஸ்மான் கனி
26 வயதான ஆப்கானிஸ்தான் இளம் வீரரான உஸ்மான் கனி வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் நடைபெற்றுவருகிறது என்ற பரபரப்புக் குற்றசாட்டை முன்வைத்து, கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார் உஸ்மான் கனி. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “சில பரிசீலனைகளுக்குப் பிறகே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உஸ்மான் கனி கிரிக்கெட் வாரியத்தில் நடைபெறும் ஊழல் என்னை இப்படி முடிவெடுக்க வைத்துள்ளது. … Read more