மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதள பக்க முகவரி மாற்றம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதள பக்க முகவரி மாற்றம் செய்யப்பட்டது. கோயில் விவரங்களை http://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குஜராத் தொங்கு பாலம் விபத்து: மோர்பி நகராட்சி நிர்வாக தலைமை அதிகாரி சஸ்பெண்ட்!

மோர்பி, குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர். மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி பாலிகா சந்தீப்சிங் … Read more

செங்கல்பட்டு: ஃபிரிட்ஜ் வெடித்ததில் மூன்று பேர் பலி! – அதிகாலையில் என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மனைவி கிரிஜா 63). துபாயில் உறவினர்களுடன் வசித்து வந்தார். கிரிஜாவின் தங்கை ராதா (55), தம்பி ராம்குமார் (47), ராம்குமாரின் மனைவி பார்கவி (35), அவரின் மகள் ஆராதனா (6) ஆகியோர், கிரிஜாவின் கணவர் வெங்கட்ராமனுக்கு திதி கொடுக்க துபாயிலிருந்து கடந்த இரண்டாம் தேதி சென்னை ஊரப்பாக்கத்துக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல்மாடியில் அனைவரும் தங்கியிருந்தனர். … Read more

அசைவம் சாப்பிட்டால் விஷப்பாம்பு தேடி வந்து கொல்லும்! கால காலமாக பயத்தில் சைவத்தை மட்டும் உண்ணும் கிராம மக்கள்

பாம்பு கடித்துவிடும் என்ற பயத்தில் அசைவ உணவை தவிர்க்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள். இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பல காலமாக இருக்கும் பழக்கங்கள். பாம்பு கடித்து கொன்றுவிடும் என பயந்து ஒரு கிராமத்தை சேர்ந்த மொத்த மக்களும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை பல காலமாக தவிர்த்து வருவது தெரியவந்துள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கெனல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராம மக்கள் பழங்கால மூடநம்பிக்கையை இன்று வரையில் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் அசைவ … Read more

சந்திர கிரகணத்தையொட்டி 8-ந்தேதி திருப்பதி கோவில் நடை அடைப்பு!

அமராவதி: சந்திர கிரகணத்தையொட்டி நவம்பர் 8-ந்தேதி திருப்பதி கோவில் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. அன்றைய தினம் சுமார் 11மணி நேரம் கோவில் மூடப்படும் என தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகணமானது, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில்  பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டு … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். குமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – தேசிய தேர்வு முகமை

புதுடெல்லி, பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த நிலையில், யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை (சனிக்கிழமை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, … Read more

“நடராஜர் கோயில் எங்கள் சொத்து, உங்களுக்கு அதிகாரமில்லை!” – அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் பதில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சொத்துக்கள், நகைகள் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்ய தீட்சிதர்களிடம் அனுமதி கேட்டது இந்து சமய அறநிலைத்துறை. அப்போது ஆய்வு செய்ய அறநிலையத்துறைக்கு அதிகாரமில்லை என்று மறுத்த தீட்சிதர்கள், அதன்பிறகு ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறையின் அதிகாரிகள் சில நாள்களுக்கு முன்பு நடராஜர் கோயிலில் உள்ள சொத்து விபரங்கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக 1950-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை உள்ள சொத்துக்கள் மற்றும் ஆபரணங்களை … Read more

உக்ரைன் ஆதரவாக ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்ட பிரித்தானியா… ஆதாரமிருப்பதாக ரஷ்யா அதிரடி

செவாஸ்டோபோல் துறைமுகத்தின் மீது பிரித்தானிய கடற்படை ட்ரோன் தாக்குதலுக்கு காரணமாக செயல்பட்டது உக்ரைன் போரில் பிரித்தானியா மறைமுகமாக களமிறங்கியிருப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் உக்ரைன் போரில் பிரித்தானியா மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளதுடன், விளாடிமிர் புடினின் போர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் வகுத்ததாகவும் தெரிவித்துள்ளது. ரஷ்ய தூதர் Andrei Kelin இது தொடர்பாக குறிப்பிடுகையில், சர்ச்சைக்குரிய கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோல் துறைமுகத்தின் மீது பிரித்தானிய கடற்படை ட்ரோன் தாக்குதலுக்கு காரணமாக செயல்பட்டது எனவும், … Read more

மெரினா அழகை ரசிப்பதற்காக கடற்கரையில் மரத்திலான சிறப்பு நடைபாதை…! விரைவில் திறப்பு..

சென்னை: மெரினா கடற்கரை மணல் பரப்பில் கடல் அழகை ரசிப்பதற்காக மரப்பலகையிலான சிறப்பு நடைபாதை வசதி அமைக்கப்பட்டு வருகிறது.  இது விரைவில் திறக்கப்பட உள்ளது. இது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மெரினா கடற்கரைக்கு விடுமுறை தினங்கள் மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் சென்று ரசித்து வருகிறார்கள். தினமும் பல ஆயிரம் மக்கள் கடற்கரையில் பொழுது போக்க வருகிறார்கள். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களும் கடலை ரசிக்கும் வகையில் பிரத்யேக பாதை அமைக்க நீதிமன்றம் … Read more