கேரள ரயிலில் பயணிகளுக்குத் தீவைத்த வழக்கு; மகாராஷ்டிராவில் ஒருவர் கைது – என்ன நடந்தது?
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் செல்லும் எக்ஸிகியூட்டிவ் ரயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள்மீது தீவைத்து எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்தது. மூன்றுபேர் உயிரைக் காவுவாங்கிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அவர் கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில், அவரின் உருவ வரைபடத்தை வெளியிட்டது கேரள போலீஸ். ஏ.டி.ஜி.பி அஜித்குமார் தலைமையில் 18 தனிப்படைகளும் … Read more