`வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு ஏனென்று கேட்காதே; எனக்கு 25% கொடு என கேள்'- மதுரையில் சீமான் பேச்சு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மூக்கையாத்தேவருக்கு விழா எடுப்பது கடமைக்காக அல்ல, அது என் கடமை. தொடர்ந்து 6 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒரு முறை எம்.பி-யாகவும் இருந்து கச்சத்தீவு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பியிருக்கிறார். விழாவில் சீமான் வைகை அணை கட்டுவதற்கு முன்பு, அந்தப் … Read more

கர்நாடகாவில் ராகுல் இன்று பரப்புரை

கர்நாடகா: கர்நாடக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு கோலாரில் இன்று ராகுல் இன்று பரப்புரை செய்ய உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளது . இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் போட்டியாளர்களை இறுதி செய்ய விரைந்துள்ளன. நேற்று  காங்கிரஸ் தனது 43 வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை வெளியிட்டது. ஆனால் கோலார் தொகுதியில் இன்னும் சித்தராமையாவுக்கு … Read more

சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளர்? முத்துராமலிங்க தேவரை முன்வைத்து சீமான்!

Tamilnadu oi-Mathivanan Maran உசிலம்பட்டி: சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளரா? என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்வைத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் முன்னாள் தலைவர் மூக்கையாதேவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: வெள்ளைக்காரனின் தூக்கு கயிற்றுக்கு துணிந்து கழுத்தை நீட்டிய மறவர்கள் நம் மன்னர்கள். இன்று லண்டனில் அந்த மன்னர்களின் படங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர்கள் செல்ஃபி எடுத்து … Read more

“எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை..!" – அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு CMRL விளக்கம்

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடந்த 14-ம் தேதி தி.மு.க-வினரின் ஊழல், சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அதில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தொகை கைமாறியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக `அல்ஸ்டாம்’ என்ற ஒப்பந்த நிறுவனம், சிங்கப்பூர் நிறுவனத்தின் மூலம் ஸ்டாலினுக்கு ரூ.200 கோடியை தேர்தல் நிதியாக வழங்கியதாக அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை இந்த நிலையில், அவ்வாறு எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை என அதற்கு மறுப்பு தெரிவித்து, சென்னை மெட்ரோ ரயில் … Read more

காங்கிரஸ் தலைவராக செயல்பட வாய்ப்பு அளித்தவர் சோனியா காந்தி: கார்கே

தெலுங்கானா: காங்கிரஸ் தலைவராக செயல்பட வாய்ப்பு அளித்தவர் சோனியா காந்தி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நடந்த விழாவில் பேசிய அவர், இந்திரா காந்தி, சோனியா காந்தி போன்றவர்கள் என்னை போன்ற ஏழை தொண்டர்களை ஊக்குவிக்காமல் இருந்த்திருந்தால், இன்று நான் சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட வாய்ப்பு அளித்தார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிபடி வேலை வாய்ப்புகளை … Read more

அமெரிக்க அமைச்சருடன் – ஜெய்சங்கர் ஆலோசனை| EAM S Jaishankar, US State Secy Antony Blinken discuss regional and global issues

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆன்டனி பிளின்கனுடன் சிறப்பான ஆலோசனை நடத்தினேன். பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இரு தரப்பு உறவுகள் வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு … Read more

தற்போது பரவி வரும் கோவிட் தொற்று வேரியன்ட் வீரியமானதா? – மருத்துவர் விளக்கம்

கோவிட் தொற்று மீண்டும் சற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருப்பதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. தொற்றால் இறப்பு எண்ணிக்கையும்‌ சற்று அதிகரித்துள்ளது. தற்போது பரவி வரும் கோவிட் வேரியன்ட் எத்தகைய வீரியம் உடையது, அது ஆபத்தானதா போன்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன. இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம். பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? … Read more

காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி

அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: “வாயுதேவனே! நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்.” போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, … Read more

ஏப்ரல் 16: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 330-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 330-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.