All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் – சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்பித்து ஏராளமானோர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர். அதாவது குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் சன்மானம் அல்லது சம்பளம் வழங்கப்படும் என்று இக்கும்பல் விளம்பரம் செய்து வருகிறது. அப்படியே சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாகாவிட்டாலும் பாதி பணம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை … Read more

நாளை நடைபெறுகிறது போரூர் – வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம்….

சென்னை:   சென்னை போரூர் – வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் ஜனவரி 11ந்தேதி (நாளை) நடைபெறும் என சிஎம்ஆர்எல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில்  நேற்று (டிசம்பர் 9ங்தேதி)  அன்று சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால்  நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த வழித்தடத்தில் மேல்நிலை மின்மயமாக்கல் பணிகள் … Read more

தங்கம் மோசடி வழக்கில் புதிய திருப்பம்; சபரிமலை தந்திரி அதிரடி கைது

திருவனந்தபுரம், திருப்பதிக்கு அடுத்தபடியாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத் தான் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். வருமானத்திலும் திருப்பதிக்கு அடுத்த இடத்தில் சபரிமலை கோயில் உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும் சபரிமலை கோயிலில் இருந்து சமீபத்தில் தங்கம் திருடப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோவில் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்களே இந்த திருட்டில் ஈடுபட்டது அய்யப்ப பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கேரள ஐகோர்ட்டு நேரடியாக கையில் எடுத்தது. ஐகோர்ட்டு நியமித்த சிறப்பு … Read more

கனவுகளை நிஜமாக்கும் தையல் கலை: சிந்துவின் கதை!

சிந்துவின் பயணம்…. தையல் பயிற்சி எவ்வாறு ஒரு சாதாரண இல்லத்தரசியை தன்னம்பிக்கை கொண்ட, பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்ணாக மாற்றியது என்பதை நமக்குக் காட்டுகிறது. ஆரம்பகால போராட்டங்களும் கனவுகளும் ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்த 37 வயதான இல்லத்தரசி எஸ்.சிந்து, தனது கணவர் வாகனம் ஓட்டி ஈட்டி வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளையும், குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் சமாளிக்க நீண்டகாலமாகப் போராடி வந்தார். அவருக்கு தையல் கலை ஓரளவிற்குத் தெரிந்திருந்தாலும், அதை ஒரு நிலையான வருமானமாக மாற்றுவதற்கான முறையான … Read more

பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னை: சென்னையில் பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும்,  மரக்கிளை வெட்டுதல், மரத்தில் விளம்பர பலகை வைத்தல், மரத்தை சுற்றி விளக்கு அமைத்தால் ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பெண் முதல்-மந்திரி ஒருவர் 24 மணிநேரமும் உழைப்பது சிலருக்கு பிடிக்கவில்லை: ரேகா குப்தா

புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தன்னுடைய 11 மாத கடந்த கால அரசின் சாதனைகளை ஒரு விரிவான அறிக்கையாக சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார். அப்போது, இதற்கு முன் நடந்த 11 வருட ஆம் ஆத்மியின் தோல்விகள், தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றையும் வெளிப்படுத்தினார். அவர் சட்டசபையில் பேசும்போது, பெண் முதல்-மந்திரி ஒருவர் 24 மணிநேரமும் உழைக்கிறார் என்ற உண்மை சிலருக்கு பிடிக்கவில்லை. சில சமயங்களில் அவர்கள் அவமதிப்பு செய்கின்றனர். சில சில சமயங்களில் … Read more

'ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது மறந்துவிட்டதா?' – விஜய்யை சாடிய சரத்குமார்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளார்கள். அண்மையில் ‘தக்லைப்’ படத்திற்கு நடந்தது அனைவருக்கும் தெரியும். சரத்குமார் விஜய் படத்திற்கு ஏற்கனவே இப்படி நடந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இப்படி நடந்து, விஜய் கைகட்டி ரோட்டில் நின்றார் தானே. இதில் அரசியல் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாக நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.  எனக்கும் ஆசை உள்ளது  … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆட்சியர், காவல் துணைஆணையர், அரசு அலுவலர்களை மன்னிக்க முடியாது…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காத   மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்,  மற்றும் நீதித்துறையை கடுமையாக விமர்சனம் செய்த  மதுரை காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் அரசு அலுவலர்களை மன்னிக்க முடியாது என நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில்,  வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதவர்களை அப்படியே விட முடியுமா? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாது குறித்து ஏன் எழுத்துப் பூர்வமான பதிலை தாக்கல் செய்யவில்லை? என்று … Read more

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5 வயது சிறுமிக்கு சூடு வைத்த வளர்ப்பு தாய் கைது

திருவனந்தபுரம், நேபாளத்தை சேர்ந்தவர் முகமது இம்தியாஸ். இவருக்கு 5 வயதில் மகள் உள்ளாள். இதற்கிடையே முகமது இம்தியாஸ், பீகார் மாநிலத்தை சேர்ந்த நூர் நாசர் என்கிற ரூபி (வயது 35) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். முகமது இம்தியாஸ் தனது மனைவி, மகளுடன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே கிழக்கேமுறி பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில், அங்கன்வாடி மையத்தில் இருந்த 5 வயது சிறுமி உட்கார முடியாமல் சிரமப்பட்டாள். இதை பார்த்த அங்கன்வாடி பணியாளர் … Read more