நிதீஷ் குமாரின் பிரதமர் பதவி கனவு ஒருபோதும் நிறைவேறாது – பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

பாட்னா, பாட்னாவில் செய்தியாளா்கள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது:- பிகார் மாநிலத்தில் நிா்வாகத்தையே நிதீஷ் குமாரால் சரியாக கவனிக்க முடியவில்லை. பிகாரில் இப்போது என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. மாநிலத்தில் நாள்தோறும் வெவ்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன. அவரது கட்சியிலேயே பல்வேறு மோதல்கள் நிலவி வருகின்றன. நிதீஷ் குமாா் மட்டுமல்ல, எதிா்க்கட்சியில் இருக்கும் பலருக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் வலிமை பற்றி முழுமையாகத் தெரியவில்லை. உலக நாடுகள் பலவும் இந்தியாவின் வளா்ச்சியைப் … Read more

உணவுக்கான தொகையைவிட கூடுதல் பில் – சமூகவலைதளங்களில் பரவும் தகவலும், ஹோட்டல் தரப்பு விளக்கமும்!

திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் பிரபல சைவ ஹோட்டலில், தான் சாப்பிட்ட உணவுக்கு பில்லில் உண்மையான தொகையைவிட, குளறுபடி செய்து கூடுதல் பணம் அச்சிடப்பட்டிருந்ததாக, அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்டவர் ஒருவர் சமூகவலைதளங்களில் பில்லோடு வெளியிட்ட பதிவு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், நடந்தது என்ன என்பதை அறிய நாம் அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்தோம். “தொழில்நுட்ப பிரச்னையால் உணவுக்கான தொகையை விட அதிகமாக முதலில் பில் வந்தது. ஆனால், அந்த கஸ்டமர் சுட்டிக்காட்டியதும், உடனே சரிசெய்து, சரியான … Read more

பேரழிவினால் பாதித்த சிரியா மீது கொடூரத்தை காட்டிய இஸ்ரேல்! ஐவர் பலியான சோகம்

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் பலியாகியுள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உருக்குலைந்த சிரிய மாகாணங்கள் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் உருக்குலைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், பல வீடுகள் தரைமட்டமாயின. இந்த பேரழிவில் இருந்து சிரியா இன்னும் மீண்டு வரவில்லை. @Reuters அதற்குள் அண்டை நாடான இஸ்ரேல் தனது கொடூரத்தை சிரியா மீது காட்டியுள்ளது. சிரியாவில் பயங்கரவாத குழுக்கள் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில், மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  இன்று மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வரும் 7ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது,  77பேர் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, திமுக அமைச்சர்கள் குழு அங்கு முகாமிட்டு … Read more

மாரடைப்பால் காலமான நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மின்மயானத்தில் தகனம்!

சென்னை: சென்னையில் மாரடைப்பால் காலமான பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மயில்சாமியின் இறுதி ஊர்வலம், இறுதிச்சடங்கில் ஏராளமான திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் கண்ணீர்மல்க பங்கேற்றனர்.

நிலக்கரி சுரங்க ஊழல்: சத்தீஸ்கரில் காங்., நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ‛சல்லடை| Coal Mining Scam: Enforcement Directorate Sieves in Chhattisgarh Cong, Executives House

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ராய்பூர்: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரது வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 2020ல் வருமான வரித் துறை நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக, மாநிலத்தின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் மீது வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரது வீடுகளில் அமலாக்கத்துறை … Read more

இந்தியாவில் ஒரே ஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தி சாதனைமத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

புதுடெல்லி, நமது நாட்டில் கடந்த ஒரே ஆண்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். டெல்லியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு அறிவியல் மாநாடு-2023 நடந்தது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் நடந்த இந்த மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு … Read more

2023 யமஹா ஃபேசினோ, ரே ZR , ரே ZR ஸ்ட்ரீட் ரேலி விற்பனைக்கு வந்தது

இந்தியா யமஹா மோட்டார் (IYM) நிறுவனம் 125 CC ஸ்கூட்டர் சந்தையில் புதுப்பிக்கப்பட்ட ஃபேசினோ 125 Fi ஹைபிரிட், ரே ZR 125 Fi ஹைபிரிட் மற்றும் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைபிரிட்  என மூன்று மாடல்களையும் புதிய வசதிகளை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில் இந்தியாவின் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில், யமஹாவின் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களில் இப்போது E20 எரிபொருளுக்கு ஏற்ற என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. … Read more

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவ திட்டமிட்டுள்ள பெரிய நாடு: மோசமான விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை

உக்ரைன் போரில், ரஷ்யாவின் நட்பு நாடான சீனா ரஷ்யாவுக்கு உதவலாம் என வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா எச்சரிக்கை உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்க சீனா திட்டமிட்டுவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அப்படி சீனா ரஷ்யாவுக்கு உதவுமானால், அது மோசமான விளைவுகளை உருவாக்கும் என்றும் அமெரிக்க தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க மாகாணங்கள் செயலரான Antony Blinken, சீனா, ஆயுதங்கள் வழங்குதல் உட்பட பல்வேறு வகையான உதவிகளை ரஷ்யாவுக்கு வழங்க திட்டமிட்டுவருவதாக தெரிவித்துள்ளார். … Read more