ஆதித்யராம் கட்டுமான நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களைச்சேர்ந்த 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: ஆதித்யராம் கட்டுமான நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களைச்சேர்ந்த நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடை பெற்று வெருகிறது. சென்னையில் 10 இடங்களிலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிரபல கட்டுமான நிறுவனம் ஆதித்யராஜ் உள்பட  அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் உள்ளிட்ட 4 குழுமங் களுக்கு சொந்தமான நாடு முழுவதும் சுமார்  60இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.  … Read more

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிவுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ராகுல்காந்தியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார்.

புதுடில்லி மேயர் தேர்தல்: சுப்ரீம் கோர்ட் அதிரடி| New Delhi Mayor Election: Supreme Court Action

புதுடில்லி : ‘புதுடில்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த, டிச., ௪ல் மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி அதிக இடங்களில் வென்றது. இதைத் தொடர்ந்து மாநாகராட்சி மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது. ஆம் ஆத்மி வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.,வும் வேட்பாளரை களமிறக்கியது. கடும் அமளி ஏற்பட்டதால், … Read more

ரூ.6,157 கோடி பாக்கி வைத்திருக்கும் மத்திய அரசு; பாதிப்புக்குள்ளாகும் 100 நாள் திட்டப் பயனாளிகள்!

இந்தியாவில் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை வழங்கும் நோக்கத்துடன் `மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்’ கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் நூறு நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்றாலும், அதைவிட குறைந்த நாள்களே வேலை வழங்கப்பட்டுவருகிறது என்கிற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கான நிதி பட்ஜெட்டில் குறைக்கப்பட்டிருப்பது குறித்து கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது. பட்ஜெட் 2023 – 24 இந்தத் திட்டத்துக்கு சமீபத்ததில் தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி, … Read more

பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை பிரபாகரன்- சீமான்

சென்னை: பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை பிரபாகரன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள்தான் உள்ளது. தம்பி பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை அவர். எக்காரணத்தை கொண்டும் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று கூறியவர், 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்க … Read more

30-க்கும் மேற்பட்ட இடங்களில் முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னை: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஐ.டி., பார்க்: அரசு அலட்சியம்; இளைஞர்கள் தவிப்பு| IT Park in Puducherry: Government Negligence; Young people suffer

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் 12 பொறியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவை தவிர, எட்டுக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளும் உள்ளன. காரைக்காலில் மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான என்.ஐ.டி., செயல்படுகிறது. மேலும், புதுச்சேரி அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கல்லுாரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பட்டதாரிகளாக வெளியே வருகின்றனர். பி.இ., பி.டெக்., டிப்ளமோ மட்டுமல்லாமல், எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட … Read more

வாங்க பறக்கலாம்..!உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்த மணமகன்: கலக்கல் திருமணம்

நேபாளத்தில் மணமகன் ஒருவர் உறவினர்கள் அனைவரையும் விமானத்தில் அழைத்து சென்று வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மணமகன் அசத்தல் திருமணங்கள் என்பது ஒருவரது கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. வசதி படைத்தவர்கள் திருமணத்தை பிரமாண்டமாகவும், வசதி குறைவான மக்கள் சாதாரணமாகவும் திருமணத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் நேபாளத்தில் மணமகன் ஒருவர் உறவினர்கள் அனைவருக்கும் ஒரே விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து அழைத்து சென்றுள்ளார். View this post on Instagram A post shared by Bhuwan and … Read more

உலகளவில் 67.76 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.83 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.02 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ஏ.சி. மின்சார பேருந்து மும்பையில் அறிமுகம்

மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ஏ.சி. மின்சார பேருந்து மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பேருந்து,  BKC – குர்லா வழித்தடத்தில் இன்னும் ஓரிரு நாளில் சேவையை தொடங்கும் என்றும், மும்பையில் உள்ள பிராந்திய போக்குவரத்து நிறுவனம் பேருந்திற்கான பதிவு செயல்முறையை இன்னும் முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.