தலைப்பு செய்திகள்
ஜனாதிபதி உரைக்கு மதிப்பளிக்க தவறுவதா? எதிர்க்கட்சி எம்.பி.,க்களை கண்டித்த சபாநாயகர்!| Does the President fail to honor the speech? The speaker condemned the opposition MPs!
அதானி நிறுவன விவகாரத்தை வைத்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கியுள்ளதால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்த, இரு சபைகளும் தயாராகின. ஆனால், அதானி நிறுவன விவகாரத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் ரகளையால், நேற்று முன்தினம் விவாதம் நடைபெறவில்லை. … Read more
அவமானத்தை கழுவ கொன்றேன்! நாட்டை விட்டு வெளியேற நினைத்த இளம்பெண்..ஆணவக்கொலை செய்த தந்தை வாக்குமூலம்
ஈராக்கில் யூடியூப் பிரபலம் தனது தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. யூடியூப் பிரபலம் திபா அல்-அலி (22) என்ற இளம்பெண் ஈராக்கில் பிரபல யூடியூபராக இருந்து வந்தார். சிரியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை திபா காதலித்து வந்துள்ளார். ஆனால் இதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 2017ஆம் ஆண்டு தனது தாயகத்தை விட்டு வெளியேறிய அவர், தனது காதலரை திருமணம் செய்துகொண்டு துருக்கியில் புதிய வாழ்வை துவங்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஜனவரி … Read more
இந்திய ரொட்டி தயாரிப்பது எப்படி? வைரலாகும் பில் கேட்ஸின் வீடியோ! | How to make Indian Roti? Bill Gatess Video!
புதுடில்லி :உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், இந்திய ரொட்டி தயாரிப்பது குறித்த ‘வீடியோ’ ஒன்றை வெளியிட, அது தற்போது ‘வைரல்’ ஆகி வருகிறது. சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட இந்த வீடியோவை, வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே, கிட்டத்தட்ட 1.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். இந்த வீடியோவில், பில்கேட்சுக்கு இந்திய ரொட்டியை தயாரிப்பது குறித்து, அமெரிக்காவின் பிரபல சமையல் கலை வல்லுனரான எய்டன் பெர்நாத் கற்றுக்கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.எய்டன் … Read more
கோலியின் இடத்திற்கு இவர் தான் சரியானவர்! தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்
விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு ராகுல் திரிபாதி சரியான தேர்வாக இருப்பார் என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். டி20 போட்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தற்போது விளையாடி வருகிறார். இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவரது இடத்தில் ராகுல் திரிபாதி விளையாடினார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் 22 பந்துகளில் 3 சிக்ஸர் 4 … Read more
அதானி நிறுவன பங்குகள் சரிவு : அணுகும் பார்வையில் ஆயிரம் விதம்| Adani Stocks Decline: A Thousand Ways of Approaching
புதுடில்லி : ‘அதானி’ குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், பல்வேறு தர நிர்ணய நிறுவனங்கள், பங்குச் சந்தைகள், அரசு இயந்திரங்கள் போன்றவை இதை ஒவ்வொரு விதமாக அணுகி வருகின்றன. அதானி குழுமத்தின் முக்கியமான நிறுவனமான ‘அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனப் பங்கு கள் விலை கடந்த 5 நாட்களில் மட்டும் 49.60 சதவீதம் அளவுக்கு, அதாவது கிட்டத்தட்ட பாதியளவுக்கு சரிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிவைக் … Read more
அண்டை நாட்டின் மீது படையெடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்ட சீன ஜனாதிபதி! எச்சரிக்கும் சிஐஏ
2027ஆம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக சி.ஐ.ஏ இயக்குநர் எச்சரித்துள்ளார். தைவான் மீது உரிமை கொண்டாடும் சீனா சீனா தனது அண்டை நாடான தைவானை தங்கள் பிரதேசமாக உரிமை கொண்டாடுகிறது. ஆனால் தைவான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சீனாவின் மேற்கு பகுதியில் தைவானின் மீது இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற கவலையைத் தூண்டியது. மேலும், உக்ரைன் … Read more
கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில்! நியமனம்… | Appointment of 5 judges recommended by collegium… soon!
புதுடில்லி,’கடந்த ஆண்டு, டிச., இறுதியில், ‘கொலீஜியம்’ பரிந்துரைத்த உச்ச நீதிமன்றத்துக்கான ஐந்து நீதிபதிகள் நியமன உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று உறுதி அளித்தது. அப்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் தொடர்பான பரிந்துரையில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு, நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகளுடன் செயல்பட வேண்டிய உச்ச நீதிமன்றத்தில் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து, ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை … Read more
கடைசி நிமிடங்களில் கோல் அடித்து அல் நஸரை காப்பற்றிய ரொனால்டோ!
அல் நஸர் மற்றும் அல் படேஹ் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் பாதி சமநிலை சவுதி அரேபியாவின் பிரின்ஸ் அப்துல்லா பின் ஜாலவி மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் – அல் படேஹ் அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியின் 12வது நிமிடத்திலேயே அல் படேஹ் அணி வீரர் கிறிஸ்டியன் டெல்லோ கோல் அடித்து அல் நஸர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு பதிலடி … Read more
வாக்காளர் பட்டியலில் மோசடி புதுடில்லியில் அ.தி.மு.க., புகார் | ADMK complains about voter list fraud in New Delhi
‘ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க., புகார் அளித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யுமான சி.வி.சண்முகம், நேற்று டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின், நிருபர்களிடம் கூறியதாவது: சட்டபை தேர்தல் நடைபெறவுள்ள, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களில் நான்கில் ஒரு பங்கினர் அந்த தொகுதியிலேயே இல்லை. இறந்த வாக்காளர்களின் … Read more