நடிகை வீட்டில் வேலை செய்த அசாம் தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு!

கேரள மாநில லாட்டரி துறை சார்பில் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. பத்து கோடி ரூபாய் பம்பர் பரிசு என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு டிக்கெட் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்மர் லாட்டரி குலுக்கல் நேற்று முன் தினம் நடைபெற்றது. அதில் பத்து கோடி ரூபாய் பம்பர் பரிசு பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. குலுக்கலில் SE 222282 என்ற லாட்டரி எண்ணுக்கு பத்து கோடி ரூபாய் பரிசு விழுந்தது. நடிகை … Read more

போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக மிரட்ட முடியாது! ராகுல்காந்தி

டெல்லி: போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக  மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி பேசினார். வயநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தன்னிடம் காவல்துறை நடத்திய விசாரணைக்கு பதில் அளிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி யிடம், அதுகுறித்து விசாரிக்க டெல்லி போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.  ஆனால், அவரை உள்ளே விட காங்கிரசார் மறுத்த நிலையில் சில மணி … Read more

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகைகள் கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகளுடன் 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.5.50 லட்சம் திருடப்பட்டுள்ளது. குடும்பத்துடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

“இது விவசாயிகளை ஏமாற்றும் வேளாண் பட்ஜெட்" – காரணங்களை அடுக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று நடந்து வருகிறது. இந்த நிலையில், வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி,”இன்று தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது. தி.மு.க 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், கரும்புக்கு ஆதார விலை ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்தது. கரும்பு சாகுபடி கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு … Read more

ஜேர்மானியர்களையும் ஆடவைத்த நாட்டு நாட்டு பாடல்: ஜேர்மனி மட்டுமா?

சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல், உலகம் முழுவதையும் கவர்ந்து வருகிறது. உலக நாடுகள் பலவற்றின் மக்களும் அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ஜேர்மனி மட்டும் விதிவிலக்கா என்ன? Express Photo இந்நிலையில், இந்தியாவின் டில்லியிலுள்ள சாந்தினி சவுக் என்னும் இடத்தில், இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் Dr Philipp Ackermann உட்பட, ஜேர்மானியர்களும் இந்தியர்களுமாக தூதரக ஊழியர்கள் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். ஃப்ளாஷ் மாப் … Read more

கொரோனா அதிகரிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது மத்தியஅரசு…

சென்னை; நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு  மீண்டும உயரத்தொடங்கி உள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.46 கோடி (4,46,95,420) ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை … Read more

தென்காசி அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியார் மீது பாலியல் புகார்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள சர்ச்சில் போதகராக இருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்டான்லி குமார், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சபை மக்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

2024 தேர்தல்: "பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென்றால்…" எதிர்க்கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் யோசனை!

எதிர்வரும் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் வியூகவாதியாக கருதப்படும் பிரஷாத் கிஷோர், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,”எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு சவால் விட வேண்டுமானால், அதன் பலத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கை அடிப்படையில் பா.ஜ.க செயல்படுகிறது. பிரசாந்த் கிஷோர் இதில் … Read more

ஒரே ஒரு டுவிட்டர் பதிவு… 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நாடு: வெளிவரும் புதிய தகவல்

அரசாங்கத்திற்கு எதிராக டுவிட்டரில் பதிவிட்ட அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சவுதி அரேபியா, தற்போது முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. 16 ஆண்டுகளுக்கு சிறை சவுதி அரேபிய நாட்டவரான 72 வயது சாத் இப்ராஹிம் அல்மாதி என்பவரே ஒரே ஒரு டுவிட்டர் பதிவால் 16 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். அமெரிக்காவில் குடியிருக்கும் இவர், சவுதி அரசாங்கத்திற்கு எதிராக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2021 நவம்பர் மாதம் தமது … Read more

வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி: உ.பி. பாஜக வழக்கறிஞருக்கு நிபந்தனை முன்ஜாமின்…

மதுரை: வட மாநில தொழிலாளர்கள்  குறித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது தொடர்பான  வழக்கில், உத்தரபிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் உம்ராவுக்கு  நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி காரணமாக ஏராளமான வடமாநிலத்தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால், தமிழகத்தின் தொழில்நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வீடியோ வதந்தி என்பது தெரிய வந்தது. இந்த நிலையில்,  … Read more