கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி  பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (7-2-2023) எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத … Read more

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார். அரசை தவிர்த்துவிட்டு வேந்தர் என்ற முறையில் ஆளுநர் தன்னிச்சையாக ஆலோசிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

பச்சிளம் குழந்தை உட்பட மூன்று பிள்ளைகளைக் கத்தியால் குத்திய தாய் கைது: இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

இங்கிலாந்திலுள்ள வீடு ஒன்றில் அலறல் சத்தம் கேட்பதாக பொலிசாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்தனர். அதிர்ச்சியளிக்கும் காட்சி இங்கிலாந்திலுள்ள Huddersfield என்னும் இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு விரைந்த பொலிசார், அங்கு பிறந்து மூன்று மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றும், இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்றும், நான்கு வயது பெண் குழந்தை ஒன்றும் இரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டு கிடப்பதைக் கண்டுள்ளனர். அதே வீட்டில், 34 வயதுள்ள பெண் ஒருவரும் காயங்களுடன் இருந்துள்ளார். உடனடியாக … Read more

துருக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிதைந்து போன 2200ஆண்டு பழமையான காசியான்டெப் கோட்டை…

துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கி தரைமட்டமான நிலையில், பாரம்பரிம் மிக்க  2200 ஆண்டு பழமைவாய்ந்த காசியான்டெப் கோட்டையும் உடைந்து நொறுங்கி சிதைத்துபோனது. இந்த பாரம்பரியமான மற்றும் பழமையான கோட்டை  அண்மையில் புனரமைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில்,  தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பழமையான காசியான்டெப் கோட்டை தரைமட்டமானது. துருக்கியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்தன. அதில், 2200 ஆண்டுகளுக்கு … Read more

சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பார்லி., முடக்கம்: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை| Parli., Freeze: Consultation chaired by PM Modi

புதுடில்லி: பார்லிமென்டில் பா.ஜ.,வினர் கூட்டம் இன்று(பிப்.,07) நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ., வினர் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். பார்லிமென்டில் பா.ஜகவின் வாராந்திர கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவை செயல்படும் போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று(பிப்.,07) நடைபெற்ற பா.ஜ., கூட்டத்தில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023-24 உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பார்லிமென்டில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபடுவது குறித்து, ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் … Read more

`வாழ்நாள் முழுக்க சிறையிலேயே அடைத்து வையுங்கள்’ – பாலியல் வழக்கில் அதிரடிக் காட்டிய நீதிமன்றம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலிருக்கும் நயம்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மனுநீதி என்பவர் கடந்த 18.03.2015 அன்று, மனநல குறைபாடு, வாய்ப் பேச இயலாத 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்திருக்கிறார். இதுதொடர்பாக, போளூர் மகளிர் போலீஸார், போக்சோ மற்றும் எஸ்.சி&எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து, மனுநீதியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், நேற்றைய தினம் … Read more

தன் மனைவியைப் போலவே இருந்த இளம்பெண்ணைக் கொலை செய்த பிரித்தானியர்: காரணத்தை நிராகரித்த நீதிபதி

அழகிய இளம்பெண் ஒருவர் தன் மனைவியைப்போலவே இருந்ததால் ஆத்திரமடைந்த ஒருவர், அதனால்தான் தான் அந்தப் பெண்ணை கொடூரமாக கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இளம்பெண் ஒருவர் தன் மனைவியைப்போலவே இருந்ததால் ஆத்திரத்தில் கொலை ஸ்கொட்லாந்தில் வாழும் ஆண்ட்ரூ (Andrew Innes, 52) தான் இணையத்தில் சந்தித்த, பிலிப்பைன்ஸ் நாட்டவரும், தற்போது பிரிஸ்டலில் வாழ்ந்துவருபவருமான பென்னிலின் (Bennylyn Burke, 25) என்ற இளம்பெண்ணையும் அவரது மகளான ஜெலிகா (Jellica, 2)ஐயும் கொலை செய்து தன் சமையலறையில் புதைத்தார். பென்னிலின் … Read more

திமுகவின் பி-டீமாக செயல்படும் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஐ சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை! ஜெயக்குமார்

சென்னை:  திமுகவின் பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் ஈபிஎஸ் ஐ சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை”  என அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஈரோடு இடைத்தேர்தல் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இபிஎஸ் அறிவித்த வேட்பாளர் தென்னரசு களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவு கேட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பும் ஆதரவு தரும் என கூறிய நிலையில், வேட்பாளர் பெயரை கூறாமல் … Read more