கிருஷ்ணகிரி, சூளகிரி அருகே குளிர்பானத்தில் விஷம்: உறவினர்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, சூளகிரி அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவியை கணவன் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் ஈடுப்பட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை!

சென்னை: “நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு பெறுவது மட்டுமின்றி, பொருளாதார நிலையிலும் சமூகநீதி அடிப்படையிலும் பின் தங்கியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தினை பாதுகாத்திட நீட் தேர்வை அகற்றிடவும், கொள்கைப்பிடிப்பான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வென்றெடுக்கும்’ எனவும் கூறியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையில் `சீஸ்மோகிராப்' பொருத்தும் பணி – விவசாய சங்கம் எதிர்ப்பு

​தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ​தென் தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய ஆதாரமாகவும் இருப்பது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணை பலவீனமாக இருக்கிறது என கேரளா அரசு குற்றம்சாட்டிவந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் அணையின் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்டது.​ ​அதன் பிறகும் கேரள அரசு தொடர்ந்து நிலநடுக்கம், நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு இருக்கிறது எனக் குற்றம்சாட்டிவந்தது. இந்த நிலையில்,​ ​டெல்லியில் நடைபெற்ற மேற்பார்வைக்குழுவின் கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வு கண்காணிப்புக் கருவிகள் … Read more

புற்றுநோயை வென்ற 38 வயது நடிகை! வெளியிட்ட வீடியோ

தெலுங்கு பட நடிகை ஹம்சா நந்தினி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்ததை வெளிக்காட்டும் வகையில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். நான் ஈ பட நடிகை தெலுங்கு திரையுலகில் நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹம்சா நந்தினி. கன்னடம், இந்தி மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக கீமோ சிகிச்சை மேற்கொண்ட ஹம்சா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்ட ஹம்சா நந்தினி இப்போது தான் மிகவும் … Read more

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார்

தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பழனியம்மாள் காலமானார்

விவசாயிகளுக்கு இலவச பேருந்து சேவை, ஏரிகள் மேலாண்மை வாரியம்; பா.ம.க-வின் வேளாண் பட்ஜெட் அம்சங்கள்!

பா.ம.க ஒவ்வோர் ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக சார்பாக வேளாண் துறைக்கான நிழல் நிதிநிலையை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் இங்கே இடம்பெறுகின்றன… 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும். … Read more

பிரபாகரன் தந்தை மரணத்திலும் மிகப்பெரும் சந்தேகம் இருக்கு! சிவாஜிலிங்கம் சிறப்பு பேட்டி

தலைவர் பிரபாகரன் தந்தை மரணத்திலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது எனவே உடனடியாக மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தேன் என இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தந்தை மரணத்தில் சந்தேகம் தலைவர் பிரபாகரன் குறித்து பழ. நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, ஈழத் தமிழ் மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தலைவர் பிரபாகரன் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டு அவரது உடல் மே 20 திகதி … Read more

சென்னை-மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்புக்கு டி.ஆர்.பாலு நன்றி!

சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்புக்கு டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்துள்ளார். தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன் எனவும் கூறியுள்ளார்.

RE Hunter 350: 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350

விற்பனைக்கு வந்த 6 மாதங்களில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்து வெற்றிகரமான சாதனை கணக்கை துவங்கியுள்ளது. கிளாசிக் 350 பைக்கை தொடர்ந்து மாதந்தோறும் 15,000 க்கு மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது. பல ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில், இதற்கு அடுத்தப்படியான இடத்தை ஹண்டர் 350 தற்பொழுது பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் … Read more

19 இருக்கைகள்… முக்கிய நகரங்கள் – புதுச்சேரியில் தொடங்குகிறது இலகுரக விமான சேவை!

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்திருக்கிறது. கடந்த 2013 ஜனவரியில் இங்கு புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டவுடன் 2013 ஜனவரி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால், அந்த விமான சேவையும் … Read more