ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா : இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய, ‘ஆன்லைன்’ சூதாட்ட தடை சட்ட மசோதா, இன்று சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த தி.மு.க. அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி … Read more

ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு!!

சென்னை : ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.ரமலான் மாத பிறை சென்னை, இதர மாவட்டங்களில் தென்படாததால் நாளை முதல் நோன்பு தொடங்குகிறது.

தாய், மகள், மருமகள்… ஒரே வீட்டில் மூன்று பெண்களிடம் சாட்டிங் செய்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ!

ரெ குஇளம் பெண்களிடம் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(29) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்த அன்று சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், காதலித்த பெண்ணை கரம்பிடிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பாதிரியார் பணியை விட்டுவிட்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட ஆசைப்பட்டதாகவும் கூறியதாக தகவல் வெளியானது. அதே சமயம் பாதிரியாரின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். … Read more

படுமோசமான சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதல் பந்திலேயே அவுட் ஆனதால், சூர்யகுமார் யாதவ் படுமோசமான சாதனையை செய்தார். அவுஸ்திரேலியா வெற்றி இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் 6வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். @Pankaj Nangia/Getty Images  ஆனால் அவர் முதல் பந்திலேயே போல்டானார். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் முதல் பந்தில் ஆட்டமிழந்திருந்தார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்தார். … Read more

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக 4 மாவட்ட நீதிபதிகளை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கொலிஜியம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 பேரை கடந்த 2022ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. அதில் 4 பேரை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, எஸ்.செளந்தர் மற்றும் ஜான் சத்யன் ஆகியோரை நிராகரித்தது. இந்த நிராகரிப்புக்குக் காரணமாக சில தகவல்கள் அப்போது … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,821,951 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,821,951 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,841,701 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,766,433 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,114  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

என் வாழ்க்கையின் மோசமான கட்டத்தில் இருந்தேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து வந்ததாக கிறிஸ்டியானோ ரொனால்டோ நேர்காணலில் தெரிவித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கத்தாரில் நடந்த உலகக்கோப்பைக்கு பின் தனது சர்வதேச கால்பந்து வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பரவலாக கூறப்பட்டது. ஆனால் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த அவர், சவுதியின் கிளப் அணியான அல்-நஸர் கிளப் அணிக்கு மாறினார். தற்போது யூரோ 2024 தகுதிச்சுற்று போட்டிகளுக்காக … Read more