அரசு மற்றும் உதவிபெறும் இல்ல குழந்தைகளுக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டி தேதிகள் அறிவிப்பு…

சென்னை: அரசு மற்றும் உதவி பெறும் இல்லங்களின் மூலம் படித்து வரும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிfள் நாளை மறுதினம் முரதல் (பிப்.27, 28) 2 நாட்கள்  சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் முன்முயற்சியாக, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 36 அரசு மற்றும் 147 அரசு நிதி உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவன இல்லங்களில் உள்ள குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க … Read more

காரல் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் பேச்சை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை: காரல் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் சர்ச்சை பேச்சை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்: `பெண்கள் முகம் சுளிக்கின்ற வகையில் பேசக்கூடாது’ – திமுக கவுன்சிலரை கடிந்த அஞ்சுகம் பூபதி

தஞ்சாவூர் மாகராட்சி தி.மு.க கவுன்சிலர் ஒருவர், `நகர்ப்பகுதியில் புதிதாக சாலை அமைத்த பின்னர், அதை உடைத்து குடிநீர் குழாய் பொருத்துகின்றனர். சிவக்குமார் நடித்த ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்தில் பெண் ஒருவர் ஜாக்கெட் மேல் உள்ளாடை அணிந்து வருவது போன்ற காட்சி போல் உள்ளது மாநகராட்சி சாலை அமைக்கும் செயல்” என பெண் கவுன்சிலர்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆண்களை விட பெண் கவுன்சிலர்களே அதிக அளவில் … Read more

மன்னிப்பா? ஒருபோதும் இல்லை… மன்னர் சார்லஸ் – இளவரசர் வில்லியம் திட்டவட்டம்

தமது வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்காக பிரித்தானிய ராஜ குடும்பம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற இளவரசர் ஹரியின் கோரிக்கையை மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் நிராகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. விழாவில் ஹரி – மேகன் தம்பதி சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழாவிற்கு இன்னும் சுமார் 70 நாட்களே எஞ்சியுள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்லஸ் முடி சூடவிருக்கிறார். @AP முறைப்படி இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஈரோடு: ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடியும் நிலையில், காலை 10 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட சம்பத் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து  வாக்குச்சேகரித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு … Read more

தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் பல இடங்களில் தாமதம்

சென்னை: சென்னையில் பல தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் இன்னும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டவில்லை.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம் | Speech, interview, report

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என முடிவு எடுத்ததை விமர்சிக்கும் துரோக சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், வரும் லோக்சபா தேர்தலில், நம் கட்சியினர் அயராது உழைப்பை கொடுக்க வேண்டும். அதற்கான உறுதி ஏற்கும் நாளாக, ஜெயலலிதா பிறந்த நாள் அமைய வேண்டும். ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம்’ என்ற பழமொழி தான் … Read more

`கஞ்சாவுக்கு எதிராக புனிதப் போர்’ – விருதுநகர் காவல் நிலையத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த டி.ஜி.பி

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்றிரவு திடீரென விஜயம் செய்தார். அப்போது, விருதுநகர் -மதுரை சாலையில் உள்ள மேற்கு காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில், காவல் நிலைய கோப்புகளை சிறப்பாக பராமரிப்பு செய்ததற்காக பெண் காவலர் முத்துலட்சுமியை பாராட்டி ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்தினார். பாராட்டு இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசுகையில், “விருதுநகர் மாவட்ட காவல் நிலையங்களில் சர்ப்ரைஸ் ஆய்வு நடத்துவதற்காக … Read more

உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் அவசர கடிதம்…

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் முறையிட திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்,  அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் … Read more

திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது: பொக்லைன், லாரி பறிமுதல்

திருச்சி: திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் ,மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக லால்குடி டிஎஸ்பி-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை அடுத்து பூக்கொல்லை பகுதியில் திடிரென சோதனை மேற்கொண்டார். மணல் கடத்தலில் இடைப்பட்ட முருகன், பாலமுருகன் ஆகியோர் கைது செய்து பொக்லைன், லாரி, பல லட்சம் மதிப்புள்ள மணல் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர்.