நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 10 முதல் 16 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

உலகளவில் 67.69 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.77 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.94 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்-10: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

உயிருக்கு போராடிய கர்ப்பிணி ஹெலிகாப்டரில் மீட்டது ராணுவம்| The pregnant woman who fought for her life was rescued by the army in a helicopter

ஜம்மு,ஜம்மு – காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனை செல்ல முடியாமல் கிராமத்தில் சிக்கிய கர்ப்பிணியை, ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் வாயிலாக அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால் சில கிராமங்கள் தனித்தீவுகளாகிவிட்டன. அவசரத்திற்கு கூட கிராமத்தை விட்டு மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் அவசர உதவி தேவைப்பட்டால், கிராம மக்கள் ராணுவத்திடம் உதவி கேட்பது … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,777,030 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,777,030 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,944,250 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,486,301 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,404 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆட்டோ மீது லாரி மோதல் 7 பள்ளி மாணவர்கள் பலி| Truck collides with auto, 7 school students killed

கோரார், சத்தீஸ்கரில், ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் கோராரில் உள்ள பள்ளிக்கு, எட்டு மாணவர்கள் ஆட்டோவில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஏழு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற ஒரு மாணவரும், ஆட்டோ டிரைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பூபேஷ் … Read more

கனடாவில் குன்றின் அடியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகளும்: அதிரவைக்கும் பின்னணி

கனடாவின் ஒன்ராறியோவில் குன்றின் அடியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகளும் விவகாரத்தில், அது கொலை மற்றும் தற்கொலையாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியை பாதுகாக்க தவறிய ஒன்ராறியோவின் மில்டன் பகுதியில் அமைந்துள்ள குன்றின் அடியில் கடந்த 2020 பிப்ரவரி மாதம், நான்கு வயதேயான கீரா ககன் மற்றும் அவரது தந்தை ராபின் பிரவுன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். @ctvnews இந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் வெளியான அறிக்கை ஒன்றில், தொடர் எச்சரிக்கை, ஆபத்து காரணிகள் … Read more

நீதிபதி விக்டோரியா கவுரி நியமன விவகாரம் திரிணமுல் எம்.பி.,க்கு அமைச்சர் பதில்| Ministers reply to Trinamool MP on Justice Victoria Gowri appointment issue

புதுடில்லி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராஜ்யசபா தலைவர் பதிலளித்தனர். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி, சமீபத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அவரை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்ற … Read more

டிஜிட்டல் கரன்சி மேலும் 9 நகரங்களில் அறிமுகம்| Digital Currency introduced in 9 more cities

மும்பை :ரிசர்வ் வங்கி, அண்மையில் ‘இ -ரூபாய்’ எனும் ‘டிஜிட்டல் கரன்சி’யைசில்லரை வாடிக்கையாளர்களுக்கு வெள்ளோட்டமாக அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது இத்திட்டத்தில் கூடுதலாக ஐந்து வங்கிகள் இணையும் என்றும், மேலும் 9 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ரபி சங்கர் கூறியதாவது:டிஜிட்டல் கரன்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், ரிசர்வ் வங்கி அவசரம் காட்டவில்லை. மாறாக, மெதுவாக இதை ஒரு நிலையான மாற்றமாக ஏற்படுத்த விரும்புகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் … Read more

மங்கும் நம்பிக்கை… துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து வெளிவரும் நடுங்கவைக்கும் புதிய தகவல்

துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று பலி எண்ணிக்கை 20,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை 20,000 நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த மூன்று நாட்களில் நூறுக்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் துருக்கியில் 17,134 பேர்களும் சிரியாவில் 3,317 பேர்களும் பலியாகியுள்ளதாக உறுதி செய்துள்ளனர். @reuters ஏற்கனவே, பலி எண்ணிக்கை 20,000 தாண்டும் என ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்திருந்தது. மேலும் … Read more