தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை :தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Tamil News today live: இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடும் தமிழக சட்டப்பேரவை!

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடும் தமிழக சட்டப்பேரவை! தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20-ம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரு நாள்களாக சனி ஞாயிற்றுக்கிழமைகளால் சட்டப்பேரவை கூட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. சட்டப்பேரவை இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் விவாதம் தொடர்கிறது. இன்றைய … Read more

குறிக்கோள் நிறைவேறிவிட்டது! மகிழ்ச்சியில் திளைக்கும் ரொனால்டோ

லக்ஸம்பர்க் அணிக்கு எதிரான வெற்றி குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார். போர்த்துக்கல் இரண்டாவது வெற்றி யூரோ 2024 தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பர்க் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ரொனால்டோ அசத்தலாக இரண்டு கோல்கள் அடித்தார். இதன்மூலம் இந்த ஆண்டில் ரொனால்டோ அடித்த கோல்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. @Getty ரொனால்டோ மகிழ்ச்சி மேலும், போர்த்துக்கல் அணிக்காக அவர் 121 கோல்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள … Read more

ஆவடி, பரந்தூர் மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை விரைவில் வெளியாகும் : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

118.9 கி.மீ. தூரத்துக்கான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை மேலும் 93 கி.மீ. அதிகப்படுத்த தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 2022 நவம்பர் மாதம் விடப்பட்ட டெண்டரில் 8 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் தகுதியுள்ள நிறுவனத்திற்கு இதற்கான ஆய்வு செய்ய ஆணை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை இன்னும் மூன்று மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ … Read more

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கருப்பு உடை அணிந்து வர காங்கிரஸ் முடிவு

சென்னை : இன்று கருப்பு உடையில் பங்கேற்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே போல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இன்று கருப்பு உடை அணிந்து பங்கேற்க முடிவு எடுத்துள்ளனர்.

கேரளா: பறந்த சிலநிமிடங்களில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் – காமாண்ட்ண்ட் உள்பட மூன்று பேர் காயம்!

கேரள மாநிலம் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து கோஸ்ட்காட்-க்கு சொந்தமான ஏ.எல்.ஹெச் துருவ் மார்க்-3 என்ற பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று நேற்று மதியம் 12.15 மணிக்கு பறந்தது. அந்த ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்தனர். ஹெலிகாப்டர் சுமார் 25 அடி உயரத்தில் பறந்ததும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மீண்டும் தரைக்குத் திரும்பியது. விமான நிலைய ஓடுதளத்தில் மிதமான வேகத்தில் மோதியபடி ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டது. தரையிலிருந்து சிறிது உயரத்தில் இருந்து விமானம் கீழே வந்ததால் பெரிய விபத்து … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,826,769 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.26 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,826,769 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,301,879 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,237,525 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,078 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் மூழ்கியதில் 29 பேர் பலி!

துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது. இதில் 29 பேர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 58 படகுகளில் இருந்து 3,300 … Read more

மார்ச்-27: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 310-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.