ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெற்றதை தொடர்ந்து நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 70க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் திரும்பப் பெற வரும் 10ம் தேதி கடைசிநாளாகும்.

இந்தோனேசியாவில் இலங்கை கோடீஸ்வரர் மர்ம மரணம்., பொலிஸார் விசாரணை

இலங்கை கோடீஸ்வரரின் மரணம் தொடர்பில் இந்தோனேசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க (Onesh Subasinghe), இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதான ஒனேஷ் சுபசிங்க, குடும்ப நிறுவனமான Opex Holding (Pvt) Ltd,. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராவார். பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற பன்முக வணிகர் என நிறுவனத்தின் இணையதளம் அவரை விவரிக்கிறது. ஒனேஷின் தந்தை அல்பிரட் சுபசிங்கவால் … Read more

கணினி பொறியாளர்கள் நிறைய பேர் தேவைப்படுவார்கள்.! டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: எதிர்காலத்தில் கணினி பொறியாளர்கள் நிறையபேர் தேவைப்படுவார்கள். அதனால் கணினி படியுங்கள் என நிகழ்ச்சியில் பேசிய  டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு டிஜிட்டல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரிய இடத்தில் இருப்பவர்கள் வரையில் பலரிடமும்,  சைபர் குற்றவாளிகள் தனது கைவரிசையை செய்து வருகின்றனர். ஏராளமானோர் சைபர் குற்ற வலையில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதனை குறிப்பிட்டு விழிப்புணர்வு … Read more

.இந்திய ஒற்றுமை பயணத்தின் போது நாட்டு மக்களின் குரலுக்கு செவி கொடுத்தேன்: ராகுல் காந்தி பேச்சு..!!

டெல்லி: இந்திய ஒற்றுமை பயணத்தின் போது நாட்டு மக்களின் குரலுக்கு செவி கொடுத்தேன் என்று ராகுல்காந்தி பேச்சு. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேச தொடங்கினார். நாடாளுமன்றதில் நடைபெற்றுவரும் கூட்டு கூட்டத்தில் ராகுல்காந்தி பேசி வருகிறார். தனது கருத்துகளை மக்களிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஒற்றுமை பயணத்தின் போது கிடைத்துள்ளதாகவும்  ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு துருக்கி நன்றி| Turkey thanks India

புதுடில்லி: நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டுக்கு, தேவையான உதவிகளை செய்ததற்காக, இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நேற்று, புதுடில்லியில் உள்ள துருக்கி துாதரகத்துக்கு சென்று, பிரதமர் மோடி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேவையான உதவிகள் செய்து தர உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அப்போது, துருக்கியின் துாதர் பிராட் சனல் சார்பில், இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. புதுடில்லி: நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டுக்கு, தேவையான உதவிகளை செய்ததற்காக, இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய … Read more

​தேனி: 1​7 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்குக் கடத்தல் – இருவர் சிக்கியது எப்படி?!

​தேனி மாவட்டம், குமுளி சோதனைச்சாவடி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ​சரக்கு வேன், லாரி​களில் ரேஷன் அரிசி ​தொடர்ச்சியாக ​கடத்த​ப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில்உத்தமபாளையம் குடிமைப்பொருள் ​​வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீ​ஸார் மாவட்ட எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். காவல் நிலையம் இந்த நிலையில், காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான​​ போலீ​ஸா​ர்​ குமுளி சாலையில்​ ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ​ஈடுபட்டிருந்தனர். அப்போது குமுளி சோதனைச்சாவடி வழியாக வந்த டாரஸ் டிப்பர் லாரியை சோதனை செய்ததில் தமிழகப் பகுதியிலிருந்து கேரளாவுக்கு 17 … Read more

சிரியா சிறையில் வெடித்த கலவரம்: நிலநடுக்கத்துக்கு மத்தியில் தப்பியோடி ஐ.எஸ் கைதிகள்

சிரியாவில் உணரப்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் கலகத்தில் ஈடுபட்டதோடு 20க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம் துருக்கியின் கஹ்ராமன்மரஸ் மாகாணத்தின் பசார்சிக் நகரில் திங்கட்கிழமை அதிகாலை 4:17 மணியளவில், 7.8 ரிக்டர் என்ற அளவிலான பயங்கரமான நிலநடுக்கம் 6 மைல் ஆழத்தில் மையம் கொண்டு வெளிப்பட்டது. இரு நாடுகளின் எல்லையில் இந்த நிலநடுக்கம் வெளிப்பட்டதால், துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு … Read more

கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி  பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (7-2-2023) எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத … Read more

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார். அரசை தவிர்த்துவிட்டு வேந்தர் என்ற முறையில் ஆளுநர் தன்னிச்சையாக ஆலோசிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.