போலீஸ் ஸ்டேஷனில் தகராறு; தங்கை கணவரை ஸ்க்ரூ டிரைவரால் குத்தமுயன்ற அண்ணன்! – தடுத்த எஸ்.ஐ-க்கு காயம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் பவானி. இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படித்து முடித்திருக்கிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வந்த கோகுல் சந்திரசேகர், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலுள்ள கருப்பட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 5  ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதல் தம்பதி இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு  நாகர்கோவிலிலுள்ள … Read more

பத்திரப்பதிவுக்கு ரூ.50ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக பிடிபட்ட சேலம் சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகர்…

சேலம்: பத்திரப்பதிவுக்காக ரூ.50 ஆயிரம்  லஞ்சம் பெற்ற  சேலம் குகைப்பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தின் சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகர்‘ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். . சேலம் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல் (38). என்பவர்,  தாயின் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்கான  தான செட்டில்மெண்ட் செய்வதற்காக, சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்திற்கு  வந்து விசாரித்துள்ளார். அப்போது இடைத்தரகர் கண்ணன் என்பவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், … Read more

காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 நெல் மூட்டைகள் கூட கொள்முதல் செய்யப்படவில்லை என அவர் கூறினார்.

நிலநடுக்கத்தால் சிதைந்து போன துருக்கி-சிரியா: மீட்பு படையை அனுப்பிய இந்தியா…!

அன்காரா, துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் … Read more

கியரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்: 50 உணவு ஸ்டால்கள்; 500 வெயிட்டர்கள்;100 வகையான மெனு

பாலிவுட் நடிகை கியாரா, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் காதலித்து வந்தனர். அவர்களின் திருமணத்தை ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடத்த முடிவு செய்துள்ளனர். இத்திருமணம் நேற்று நடப்பதாக இருந்தது. தற்போது இன்று இத்திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் ஜெய்சால்மரில் குவிந்துள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ராவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பஞ்சாப் மற்றும் டெல்லியிலிருந்து வந்துள்ளனர். அவர்களை தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொள்ள சித்தார்த் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்திருக்கிறார். திருமணம் நடைபெறும் ஹோட்டல் திருமணம் நடக்கும் … Read more

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி மற்றும் 4 பேர் பதவி ஏற்றனர்…

சென்னை: மெட்ரோல் உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி உள்பட 5 பேர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி பொறுப்பு ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனவரி 17 அன்று எல் விக்டோரியா கௌரியை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்ததையடுத்து, அவரை குடியரசு தலைவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி அவரது பதவி ஏற்பு விழா இன்று காலை … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.64,500 பறிமுதல்

ஈரோடு: ஈரோட்டில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.64,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.64,500 பணம் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொழிலில் சிறியது, பெரியது என ஒன்றும் இல்லை – மோகன் பகவத் பேச்சு

மும்பை, மும்பையில் நேற்று நடந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ஒருவர் எந்த வேலை செய்தாலும், அதை மதிக்க வேண்டும். தொழிலாளர்கள் மதிக்கப்படாதது தான் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. ஒரு வேலைக்கு அறிவு சார்ந்த அல்லது உடல் உழைப்பு என எது தேவைப்பட்டாலும் அதற்கு கடின உழைப்பு தேவைப்படுகிறது. எல்லா வேலையும் மதிக்கப்பட வேண்டும். எல்லோரும் வேலைக்கு பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 10 சதவீத அரசு … Read more

Doubt of Common man: ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கான வழிகள் என்ன? முதலீட்டை எங்கெல்லாம் திரட்டலாம்?

விகடனின் “Doubt of Common man” பக்கத்தில் ” ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கான வழிகள் என்ன? முதலீட்டை எங்கெல்லாம் திரட்டலாம்? என்று விகடன் வாசகர் கவின் கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து வெற்றிகரமாக ஸ்டார்ட் அப் நடத்தும் குமரி ஷாப்பி நிறுவனர் தீபினிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் இதோ… இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. ஒருகாலத்தில் தொழில்நுட்பம் என்பது இந்தியாவில் புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு எட்டாக் கனியாய் … Read more