04. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 04 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
கடந்த ஆண்டு மட்டும் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த குழுக்களில் இந்தியர்களின் குழு மூன்றாவது இடத்தில் உள்ளது. புலம்பெயரும் இந்தியர்கள் 2022ஆம் ஆண்டு முதல் 9 மாதங்களில் பிரித்தானியாவுக்கு சிறிய படகுகள் மூலம் 233 இந்தியர்கள் புலம்பெயர்ந்தனர். ஆனால் ஜனவரியில் சுமார் 250 இந்தியர்கள் புலம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு புலம்பெயர்ந்த 1,180 பேரில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை இந்தியர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். சிரியர்களைத் தொடர்ந்து ஆப்கானியர்கள் மிகப்பெறிய குழுவாக இருந்தனர். இதுதொடர்பாக உள்துறை அலுவலக அதிகாரி கூறும்போது, … Read more
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதற்காக 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் ஈரோட்டில் முகாமிட்டு, பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன், காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி-க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வந்திருந்தனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “ஈரோடு கிழக்குத் தொகுதியில் மதச்சார்பற்ற … Read more
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க உச்சநீதிமன்றம் அதிமுக இரு அணிகளுக்குமான பொதுவான வழிகாட்டு நடைமுறையை தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியான பிப். 7 ம் தேதிக்குள் இதில் இறுதி முடிவு எடுக்க முடியாது என்பதால் இடைக்கால நடைமுறையை கூறியுள்ளது. அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நபரை பொதுவேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அவருக்கு இரட்டை இலை … Read more
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடியில் ஒப்பந்தம். தீ பாதுகாப்பு , காற்றோட்டம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடியில் வோல்டாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், அய்யாக்கண்ணுபிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கிறார். இவர் கடந்த மாதம் தொடக்கத்தில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் வீட்டு உபயோகப் பொருள்களை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார். அதன் பிறகு சில நாள்கள் கழித்து இவரின் வீட்டு முகவரிக்கு பதிவு தபால் ஒன்று வந்திருக்கிறது. அந்த தபாலில், இவர் ஆர்டர் செய்த பொருள்களைக் குறிப்பிட்டு, `எங்கள் நிறுவனத்தின் 14-ம் ஆண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு பரிசு கூப்பன் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த … Read more
இலங்கையின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 1000 ரூபாய் நினைவு நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. முதல் நாணயம் முதல் நாணயம் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரபூர்வமாக நேற்று வழங்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 71-வது நினைவு நாணயம் இதுவாகும். இதன் எடை 28.28 கிராம். நாணயத்தின் முன்புறம் இலங்கைக் கொடியை நாணயத்தின் மையத்தில் வைத்திருக்கும் உருவத்துடன் பாரிய எழுத்துக்களில் “75” என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. Twitter @PMDNewsGov … Read more
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை பிப்.1 ம் தேதி போடப்பட்ட நிலையில் இதன் டைட்டில் லுக் மற்றும் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை அதிரவைத்துள்ளது. லியோ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19 ம் தேதி ரிலீசாகும் என்று இந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வைகோ மரியாதை செலுத்தினார்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மண்டல். இவர் சென்னை வேளச்சேரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி ரமேஷ் தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளிகளுடன் சமையலுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்களை வாங்கிக்கொண்டு, தான் தங்கியிருக்கும் பகுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். வேளச்சேரி காவல் நிலையம் அப்போது, அந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர், சாலையில் நின்று நடனமாடிக்கொண்டிருந்தனர். அதில், ஒரு இளைஞரின் கால் ரமேஷின் மீது … Read more