சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

மதுரை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு நாளை முதல் பிப்.6 வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 3-ல் ஒரு பங்கு குறைப்பு

புதுடெல்லி, ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மத்திய பட்ஜெட்டில் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 545 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், அந்த அமைச்சகத்துக்கு முதலில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. பின்னர், திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின்படி, நிதி ஒதுக்கீடு ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போது ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதால், நிதி ஒதுக்கீடு 13 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. … Read more

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: எஃப்.பி.ஓ பங்கு விற்பனையிலிருந்து பின்வாங்கிய அதானி!

 அதானி நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி நிறுவனப் பங்குகள் கடும் சரிவை கடந்த ஒரு வாரமாகச் சந்தித்துவருகிறது. அதானி உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்: 11வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி; ஹிண்டன்பர்க் தான் காரணமா? இந்நிலையில் ரூ.20000 கோடி மதிப்பிலான எஃப்.பி.ஓ பங்கு விற்பனை மூலம் நிதித் திரட்டும் திட்டத்தை சமீபத்தில் அதானி குழுமம் செயல்படுத்தியது. அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையிலும், பங்குகள் … Read more

மெஸ்சி அடித்த கோலை மறுத்த நடுவர்! இருமுறை பெனால்டிகளை தவறவிட்ட எம்பாப்பே..அதிர்ச்சியடைந்த PSG ரசிகர்கள்

மோண்ட்பெல்லியர் அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி அடித்த கோல் ஆப்சைடு என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆப்சைடு கோல் கடந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த நெய்மர் இல்லாமல் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி இன்றைய போட்டியில் களமிறங்கியது. பிரான்சின் Stade de la Mosson மைதானத்தில் தொடங்கிய போட்டியில் PSG அணி மோண்ட்பெல்லியர் அணிக்கு எதிராக மோதியது. ஆக்ரோஷமாக ஆரம்பித்த லயோனல் மெஸ்சி, ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார். 34′ Pas … Read more

நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நாகை: நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள அறிவிப்பில், கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூரில் உள்ள பள்ளியில், காலை சிற்றுண்டி திட்டத்தினை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூர்: வேலூரில் உள்ள சத்துவாச்சாரி ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில், காலை சிற்றுண்டி திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார். மேலும்பள்ளிகளில் காலை சிற்றுண்டி சாப்பிட்டு தரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மத்திய பட்ஜெட்: ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்

புதுடெல்லி, 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான அறிவிப்புகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதுபற்றிய விவரங்கள் வருமாறு:- அடுத்த நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கும் கடன்கள் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தப்படும். கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன் வளம் ஆகியவற்றுக்காக கடன் வழங்குவதில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும். விவசாய ஊக்குவிப்பு நிதியம் விவசாயத்துக்கு என டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உருவாக்கப்படும். இது விவசாயம் சம்பந்தப்பட்ட … Read more

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அதிகரிக்கும் மோதல்… அங்கு என்ன செய்கிறது அமெரிக்கா?!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவிவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வழக்கமாக இருந்துவருகிறது. ஏவுகணை தாக்குதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாலாஸ்தீனம் மீது … Read more

பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் வருமான வரி விலக்குக்கான வரம்பு உயர்த்தியது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் … Read more

கோல் மழை பொழிந்த ஜேர்மன் கிளப் அணி! பயிற்சியாளருக்கே சிவப்பு அட்டை கொடுத்த நடுவர்

ஜேர்மனியில் நடந்த கால்பந்து போட்டியில் பாயெர்ன் முனிச் அணி 4-0 என்ற கோல் கணக்கில் மெய்ன்ஸ் அணியை வீழ்த்தியது. கோல் மழை ஜேர்மனியின் பிரபல கிளப் அணியான பாயெர்ன் முனிச் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பாயெர்னின் எரிக் மாக்ஸிம் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து இளம் வீரரான (19) ஜமால் மியூசியாலா அசத்தலாக கோல் அடித்தார். பின்னர் 44வது நிமிடத்தில் லெரோய் சனே ஒரு கோல் அடிக்க, பாயெர்ன் அணி 3-0 என … Read more