நேரடி பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நேரடி பணி நியமணத்தின்போது  ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மாநில அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட  ஈஸ்வரி என்பவர், கோவை மாநகராட்சியில்  கருணை அடிப்படையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவரது மனுவில்,  கோவை மாநராட்சியில் 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 … Read more

காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழைக்காக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"16 வருட போலீஸ் சர்வீஸில் முதன் முதலாக திருடனைப் பிடித்திருக்கிறேன்"- மின்னல் முரளி நடிகர் பெருமிதம்

கேரள மாநிலத்தில், போலீஸ் வேலையில் இருந்துகொண்டே சினிமாவிலும் நடிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் ஜிபின் கோபிநாத். மின்னல் முரளி, கோல்ட் கேஸ், தி கிரேட் ஃபாதர் உள்ளிட்ட பல சினிமாக்களில் நடித்திருக்கிறார் ஜிபின் கோபிநாத். இவர் திருவனந்தபுரம் போலீஸ் கன்ட்ரோல் ரூமில் அதிகாரியாக இருக்கிறார். இவரது வீடு பட்டம் பிலாமுறி பகுதியில் அமைந்திருக்கிறது. இவர் தன்னுடைய வீட்டில் கார் நிறுத்த வசதி இல்லாததால், வீட்டுக்குச் செல்லும் பாதையில் கார் பார்க்கிங் செய்வது வழக்கம். அந்த வகையில், … Read more

தகுதியிருந்தும் பாரபட்சம் காட்டிய கனடா: போராடி வென்ற ஒரு இலங்கைத்தமிழரின் அனுபவம்…

ஒரு ஆசிரியருக்குரிய கல்வித் தகுதி இருந்தும், புலம்பெயர்ந்தவர் என்பதாலோ என்னவோ பாரபட்சம் காட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர், போராடி தன் உரிமையை மீட்டுக்கொண்டுள்ளார். படித்திருந்தும் பாரபட்சம் காட்டிய கனடா திருஞானசம்பந்தர் ‘திரு’ திருக்குமரன், 2012ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர். இலங்கைத் தமிழரான திருக்குமரன், இலங்கையிலும், அவுஸ்திரேலியாவிலும் கல்வி பயின்று வேதியியலில் ஒரு இளம் அறிவியல் பட்டமும் ஒரு முதுகலைப் பட்டயப்படிப்பும் முடித்து அதற்கான சான்றிதழ்களையும் முறைப்படி பெற்றுள்ளார். ஆனால், Ontario College of Teachers (OCT) என்னும் … Read more

ரூ.2.37 லட்சம் கோடி இழப்பு: அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, உலகப் பணக்காரர்களில் 7ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார் அதானி…

டெல்லி: பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அம்பானி நிறுவனம் மீதான அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டார் . அவரது பங்குகள் வேகமாக சரிந்து வருகிறது. 10 அதானி குழுமப் பங்குகள் 2 நாட்களில் சந்தை மதிப்பில் ரூ.2.37 லட்சம் கோடியை இழந்துள்ளன. இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழில் நிறுவனமான அதானி குழுமம் பல நாடுகளிலும் தனது தொழிலை நடத்தி வருகிறது. அனைத்து … Read more

இலங்கை கடற்படை சிறைபிடித்த 3 தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!

இலங்கை: இலங்கை கடற்படை சிறைபிடித்த 3 தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் உரிமையாளர்கள் ஆஜராகாததால் 3 ராமேஸ்வரம் விசைப்படகு அரசுடைமையாக்க நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து… ராகுல் காந்தியின் வாக்குறுதி, `வாக்கு' அரசியலா?!

பலத்த பாதுகாப்புடன் ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, ரம்பான் மாவட்டத்தில் மழை பெய்து, நிலச்சரிவு ஏற்பட்டதால், பயணத்தை இரண்டு நாள்கள் ஒத்திவைத்திருக்கிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட … Read more

2023 தைப்பூசம் எப்போது ? விரதம் இருக்கும் முறை எப்படி?

 தமிழர்கள் பாரம்பரியமாக பல விழாக்களை கொண்டாடுவது மரபாகும் அவற்றுள் தைப்பூசமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தைப்பூச திருநாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். முருகனுக்கு உகந்த தினம் தைப்பூச தினம் எனக் கூறுவர். இந்தவருடம் தைப்பூச திருநாள் எந்தநாளில் வருகின்றது? விரதம் எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்போம்.  எப்போது? தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணையும் நாளை தைப்பூசம் என்கிறோம். … Read more

Let’s Get Married : தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் பெயர் வெளியானது …

தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (DEPL) நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தமிழில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு Let’s Get Married – LGM என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை DEPL நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க லவ் டுடே புகழ் இவானா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தோனியும் அவரது மனைவி … Read more

வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளிக்கபப்ட்டுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் தமிழ் தொழிலாளர்களை வட வட மாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்திச் சென்று தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.