50 லிட்டர் டேங்கில் 57 லிட்டர் பெட்ரோல்; நீதிபதியிடம் வசமாக சிக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்!

பெட்ரோல் பங்கில் அவ்வப்போது மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. தற்போது நீதிபதியிடமே இது போன்ற மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தன் காருக்கு பெட்ரோல் நிரப்பியிருக்கிறார். அப்போது டேங்க் புல் செய்யுமாறு தெரிவித்திருக்கிறார். ஊழியரும் பெட்ரோல் டேங்கை புல் செய்துவிட்டதாக பெட்ரோல் பில்லை கொடுத்திருக்கிறார். நீதிபதி, பில்லைப் பார்த்து … Read more

சுவிட்சர்லாந்தில் வாழும் சுமார் 700,000 பேருக்கு ஆபத்து: அடுத்த மோசமான செய்தி…

புவி வெப்பமயமாதல் தன் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டது…  உஷ்ண நாடுகளில் பனி பெய்கிறது, வழக்கமாக பனி பெய்யும் நாடுகளில் பனியைக் காணவில்லை. பனி இல்லாததால் பனிச்சறுக்கு விளையாட்டு மையங்கள் என்ன செய்வதென திகைத்துப்போயுள்ளன. சுவிட்சர்லாந்தில் பாலைவனத்தாவரங்கள் பனி பெய்யும் சுவிட்சர்லாந்தில் பாலைவனத்தாவரங்கள் பெருகி, அவற்றை ஒழிக்க நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. சில சப்பாத்திக்கள்ளித் தாவரங்களால் குளிர் பிரதேசங்களில் வளர முடியும் என்றாலும், சுவிட்சர்லாந்தில் சப்பாத்திக்கள்ளி வளர்ந்து பாலைவனம்போல் காட்சியளிப்பதை கற்பனைகூட செய்துபார்க்கமுடியவில்லை. அத்துடன், தற்போது சுவிட்சர்லாந்தில் வளரும் சப்பாத்திக்கள்ளி, … Read more

சர்வதேச விமான கண்காட்சி; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

பெங்களூரு, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்க உள்ளார். … Read more

மாணவிகளை மிரட்டி அழைத்துக் கொண்டு ரகசிய சுற்றுலா; ஆசிரியர் போக்சோவில் கைது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரமேஷ் (48). கடந்த வாரம், இவர் கல்விச் சுற்றுலா கூட்டிச் செல்வதாகக் கூறி, பள்ளி நிர்வாகத்துக்குத் தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள், 2 மாணவர்கள் என 5 மாணவர்களை கொடைக்கானலுக்குத் தன்னுடைய காரில் ரகசியமாக சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஒருநாள் இரவு தங்கியதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் சுற்றுலா சென்ற விவகாரம், சுற்றுலா சென்ற மாணவர் ஒருவரின் மூலமாக வெளியில் … Read more

கும்பத்தில் உருவாகும் திரிகிரக யோகம்! நல்ல லாபத்தைக் பெறப்போகும் ராசிக்காரர் யார் ?

திரிகிரக யோகத்தால் சில ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகிறது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கவுள்ளது. இப்போது திரிகிரக யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைக் பெறப்போகும் ராசிக்காரர் யார் என்று பார்ப்போம்.  உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW   மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

ஆலை விரிவாக்கம் குறித்து தமிழ்நாடு அரசுடன் நிசான் ஒப்பந்தம்

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிசான் நிறுவனம் தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஓரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தால், ஆளுங்கட்சி அராஜகத்தால் தான் ஜெயித்தது என, நீங்களும் சொல்லக் கூடாது!| Speech, interview, report

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: ‘இடைத்தேர்தலில், அ.தி.மு.க., நிற்கிறது. எனவே நாங்கள் நிற்கிறோம்’ என, தி.மு.க., களத்திற்கு வர வேண்டியது தானே. வராததற்கு காரணம், தோல்வி அடைந்தால், ‘காங்கிரஸ் தான் தோற்றது’ எனக் கூறி தப்பித்து விடலாம் என்பதால் தான். அதே மாதிரி, இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தால், ‘ஆளுங்கட்சி அராஜகத்தால் தான் ஜெயித்தது’ என, நீங்களும் சொல்லக் கூடாது! காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள்மத்திய அமைச்சர் சிதம்பரம்பேச்சு: உக்ரைன் போர் மூலம், கச்சா எண்ணெய் விலை உயர்வால், … Read more

இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்? நிபுணர் தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் பயங்கர நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி என்பது குறித்து நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த திங்கட்கிழமை பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுக்குமாடி கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அங்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் இந்தியாவில் தடுக்கப்படுகின்றன. சிறிய அளவிலான நிலநடுக்கங்கள்தான் இத்தகைய பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். … Read more

"அடக்கம் செய்யகூட பணமில்லை" – கணவர், தாயாரின் சடலங்களுடன் ஒரு வாரம் வசித்த தாய், மகன்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், வண்டிப்பேட்டை, குமணன் வீதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் காலமாகி விட்ட நிலையில், இவரின் மனைவி கனகாம்பாள் (80), மகள் சாந்தி (60)யுடன் வசித்து வந்தார். சாந்தியின் கணவர் மோகனசுந்தரம் (74) இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு சரவணகுமார் (33) என்ற மகனும், சசிரேகா (35) என்ற மகளும் இருக்கின்றனர். சசிரேகாவுக்கு திருமணமாகி திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் வசித்து வருகிறார். சரவணகுமார் சற்று மனநலம் சரியில்லாதவர். ஏற்கெனவே சாந்தியின் கணவரான மோகனசுந்தரம் நைட் … Read more

சென்னையில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

சென்னை: சென்னையில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள், நடைபயிற்சி செல்வோர், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.