தென்கிழக்கு வங்கக்கடலில் ஜன.27ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கீழடுக்கு சுழற்சியால் ஜனவரி 27ல் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

ரூ.19 லட்சம் மதிப்பு கள்ள நோட்டு பறிமுதல்| Fake notes worth Rs.19 lakh seized

மும்பை :மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மல்வானியில், கள்ள நோட்டுகளை பரிமாற்றம் செய்வது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன் கூட்டாளி குறித்து தகவல் அளித்தார். இதையடுத்து, பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனையிட்டதில், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. … Read more

ஆட்குறைப்பில் அமெரிக்க நிறுவனங்கள்… சிக்கலை சந்திக்கும் இந்தியர்கள் – கவனிக்குமா மோடி அரசு?!

கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா (பேஸ்புக்), அமேசான், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிவந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், அமெரிக்காவில் பணிபுரிவதற்கான விசா காலம் இருப்பதால், அதுவரை அங்கு பணிபுரிவதற்காக புதிய வேலைவாய்ப்புகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. வேலையிழப்பு சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் பெரும்பணக்காரரான எலன் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கினார். வாங்கி கையோடு, செலவுக் குறைப்பு என்ற பெயரில் அந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அவர் … Read more

குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பிரபலமான பெண்: அம்பலமான பகீர் பின்னணி

கொலம்பியாவின் பிரபல DJ ஒருவர் குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்ட சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் காதலலர் தலைமறைவு கொலம்பியா தலைநகரான பொகோடாவிலேயே 23 வயதான பிரபல DJ Valentina Trespalacios என்பவரின் சடலம் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. Credit: Newsflash உடற்கூராய்வில், அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், குறித்த பெண்ணின் காதலரும் டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவருமான ஜான் பவுலோஸ் என்பவரை பொலிசார் தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

வீரவணக்க நாள்: மொழிப்போர் தியாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

சென்னை: வீரவணக்க நாளை முன்னிட்டு மறைந்த  மொழிப்போர் தியாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளை கவுரப்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி வீரவணக்கம் நாள் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம். அதன்படி, இன்று மொழிக் காவலர்களின் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள மணிமண்டபத்தில் இன்று … Read more

பிப்.27ல் இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு..!!

ஈரோடு: பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் சு.முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த இளைஞரால் பெங்களூரில் பரபரப்பு| A young man who threw currency notes created a commotion in Bangalore

பெங்களூரு, பெங்களூரில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேம்பாலத்திலிருந்து, ரூபாய் நோட்டுகளை கீழே வீசி எறிந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கே.ஆர்.மார்க்கெட் என்ற பகுதியில் மேம்பாலம் உள்ளது. நேற்று காலை இந்த மேம்பாலத்துக்கு வந்த ஒரு இளைஞர், தான் வந்த இருசக்கர வாகனத்தை ஓரத்தில் நிறுத்தினார். அந்த இளைஞர் கோட் அணிந்திருந்ததுடன், சுவரில் மாட்டும் கடிகாரத்தை தன் கழுத்தில் அணிந்து, வித்தியாசமான தோற்றத்துடன் காணப்பட்டார். மேம்பாலத்தின் … Read more

மணிப்பூர்: பாஜக மாநில நிர்வாகி சுட்டுக்கொலை – சரணடைந்த குற்றவாளி; மேலும் ஒருவர் கைது

மணிப்பூர் பா.ஜ.க மாநிலப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் லைஷ்ராம் ரமேஷ்வர் சிங் (50). இவர் தௌபல் மாவட்டத்தை சேர்ந்த இவர், நேற்று க்ஷேத்ரி லைகாய் பகுதியில் உள்ள அவரின் இல்லத்தின் முன் காலை 11 மணியளவில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது பதிவு எண் இல்லாத காரில் வந்த இருவர், அவரை துப்பாக்கியால் சுட்டதில் அவரின் மார்பில் குண்டு பய்ந்தது. உடனே அக்கம் பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஜக … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை! விபரீத முடிவுக்கான காரணம்… புகைப்படங்கள்

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து மீட்கப்பட்ட உடல்கள் மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் யவத் கிராம பகுதியில் உள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன.  சம்பவ இடத்துக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் விரைந்தனர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது … Read more

மாநிலம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் புதிய அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் மாநிலம் முழுவதும், அதாவது 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின், 2022ம் ஆண்டு டிசம்பர் 14ந்தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் விளையாட்டுத்துறை மட்டுமின்றி பல்வேறு துறை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். குறிப்பாக முதலமைச்சரின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் … Read more